கோவை சாக்கு வியாபாரிகள் சங்கத்தை பூட்டிய 7 பேர் மீது புகார்..!

கோவை உக்கடத்தில் கோவை மாநகர சாக்கு வியாபாரிகள் சங்கம் உள்ளது..இந்த சங்கத்தின் விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதாக சங்க உறுப்பினர்கள் 25 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் கடந்த மாதம் 23-ந்தேதி கும்பலாக சங்கத்துக்குள் புகுந்து அங்கிருந்த செக் புத்தகம்,உள்ளிட்ட தஸ்தாவேஜ்களை எடுத்துச் சென்று விட்டதாகவும், அங்கிருந்தவர்களை மிரட்டி,சங்ககதவை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.. இதுகுறித்து அதன் தலைவர் வி .எம் . உபை துர்ரகுமான் உக்கடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை நடத்தினார்கள் இது தொடர்பாக எஸ்.நூர் முகமது,பி .எம். மொய்தீன், அபுதாஹிர், பி .எம். சுலைமான் , ஏ.அப்பாஸ், ஜக்கரியா ,இ .என். சிவக்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல் ,அத்துமீறி நுழைதல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.