மழை வெள்ளம் பாலத்தில் சிக்கிக் கொண்ட கல்லூரி பேருந்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள் – கோவையில் பேருந்தை கயிறு கட்டி இழுத்த பொதுமக்கள்

கோவையில் கன மழை: பாலத்தில் சிக்கிக் கொண்ட பள்ளி பேருந்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்…மழை வெள்ளம் பாலத்தில் சிக்கிக் கொண்ட கல்லூரி பேருந்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள் – கோவையில் பேருந்தை கயிறு கட்டி இழுத்த பொதுமக்கள்

தமிழக கேரளா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை அதிகரித்து வருகிறது இதனால் பல்வேறு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கோவையில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு வெள்ளப்பெருக்கால் பாலங்கள் சேதம் அடைவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பெய்த பலத்த மழையால் காந்திபுரத்தில் இருந்து சிவானந்தா காலனி வழியாக சாய்பாபா காலனி செல்லும் போது கோவை மேட்டுப்பாளையம் ரயில்வே பாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் தனியார் கல்லூரி பேருந்து நீரில் சிக்கிக் கொண்டது இதனால் கல்லூரி மாணவ மாணவிகள் பேருந்தில் மாட்டிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்து அவர்கள் கல்லூரி மாணவர்களை பத்திரமாக பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். பின்னர் கல்லூரி பேருந்து கயிறு கட்டி வெளியே இழுத்தனர்.
இந்நிலையில் இதனை செல்போனில் வீடியோ எடுத்த பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.