பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம்: திருமண நிகழ்ச்சி அமைப்பாளர் குத்திக் கொலை- டிரைவர் கைது..

கோவை சுந்தராபுரம் .சிட்கோ,எல்.ஐ.சி. காலனி சேர்ந்தவர் ஆனந்தன் இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 34) இவர் திருமண நிகழ்ச்சிக்கு மேடை அலங்காரம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் தொழில் செய்து வருகிறார்.இவருக்கும் குனியமுத்தூர் பி .கே .புதூர் அசோக் குமார் நகரை சேர்ந்த சுதீர் (வயது 29 ) இவரது தம்பி ஸ்ரீஹரி ( வயது 24)ஆகியோருக்கு இடையே பணம்- கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில் நேற்று சுதீர் ஸ்ரீஹரி ஆகியோர் சந்தோஷ் குமாரை அவரது வீட்டுக்கு வரவழைத்து பணம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார்கள்.அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த சுதீர் ஸ்ரீஹரி ஆகியோர் சந்தோஷ்குமாரை கத்தியால் குத்தினார்கள். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலையில் இறந்தார். இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து சுதிரை கைது செய்தனர்.அவரது தம்பி ஸ்ரீஹரியை தேடி வருகிறார்கள்.கைது செய்யப்பட்ட சுதிர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.கொலை செய்யப்பட்ட சந்தோஷ் குமாருக்கு சந்தியா என்ற மனைவியும், கவின் (வயது 4) என்று மகனும் உள்ளனர்