கோவை: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி சேர்ந்தவர் சங்கர் ( வயது 32)இவர் உக்கடம் -பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு இவர் உக்கடம் – பேரூர் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம் மது குடிக்க பணம் கேட்டார்.இவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் இருந்த.530 ரூபாயை பறித்துக் கொண்டார்.இது குறித்து சங்கர் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் தெய்வமணி வழக்கு பதிவு செய்து கெம்பட்டி காலனி 7-வது வீதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் தினேஷ் குமார் என்ற பேட்டரி தினேஷ் (வயது 21) என்பவரை கைது செய்தார்.இவர் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார்.இவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Leave a Reply