திருவாரூர் மாவட்டத்தை மொத்தமாக கைப்பற்றி தி.மு.க- அமோக வெற்றி.!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகளையும் 4 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் ஒட்டுமொத்தமாக 12,838 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. வாக்குஎண்ணிக்கை காலை எட்டு மணி முதல் முன்னிலை மற்றும் வெற்றி நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளையும் 7 பேரூராட்சிகளிலும் திமுக வேட்பாளர்கள் பெரும்பான்மை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். குறிப்பாக வலங்கைமான், நன்னிலம், பேரளம் பேரூராட்சிகளில் திமுக வேட்பாளார்கள் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்றனர்.