குரங்கு அம்மை : கோவை வாளையாறு எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு.
கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில்,கோவை வாளையாறு எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தமிழக – கேரளா எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் குரங்கு அம்மை அறிகுறிகள் கண்டறிய சுகாதாரத்துறை சார்பில் 2 சுகாதார ஆய்வாளர்கள் பணியில் உள்ளனர்.
ஆனால், போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இல்லாததால் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் நெடுஞ்சாலையிலேயே செல்வதால், நிறுத்தி சோதனை செய்யப்படுவது இல்லை.
Leave a Reply