கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: 7 பேர் பயங்கரவாதிகளானது அம்பலம்
போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில், கோவை கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஏழு பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் ஜமேஷா முபின், கூட்டாளிகளான, 11 பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட முகமது அசாருதீன், அப்சர்கான், பெரோஸ்கான், முகமது தவ்பீக், ஷேக் இதயத்துல்லா, சனோபர் அலி, முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 7 பேரும் கடந்த, 2ம் தேதி என்.ஐ.ஏ., அதிகாரிகளால் கோவை அழைத்து வரப்பட்டனர்.
கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஏழு பேருக்கும் வழங்கப்பட்ட போலீஸ் காவல் முடிவடைந்தது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை அழைத்துச் சென்று, என்.ஐ.ஏ., சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலீசார் கூறுகையில்,’ஏழு பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன’ என்றனர்.
Leave a Reply