சேவல் சண்டை சூதாட்டம் – 5 பேர் கைது..!

கோவை மாவட்டம் கோட்டூர் பக்கம் உள்ள தொண்டாமுத்தூரில் ஒரு தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக கோட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது . சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த திருமலைச்சாமி ( வயது 43) சந்திரன் ( வயது 35 )பில்லி சின்னம்பாளையம் கவிமணி ( வயது 20 ) புருஷோத்தமன் (வயது 23) மதன்குமார் ( வயது 20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .சூதாட பயன்படுத்தப்பட்ட 1100 ரூபாயும் ,2 சேவல்களும் பறிமுதல் செய்யப்பட்டது.