கோவை கல்லூரி மாணவர் திடீர் மாயம்..!

கோவை சிங்காநல்லூர் ,வசந்தாமில் ரோட்டில் உள்ள போலீஸ் காலனியை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மகன் நவீன் ஜெகதீஷ் (வயது 21) குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. படித்து வருகிறார்.இவர் ஏராளமான பாடங்களில் தோல்வியடைந்து இருந்தார். இதனால் மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வினோத்குமார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.