வால்பாறை நகராட்சி கால் பந்தாட்ட மைதானத்தின் அருகாமையில் குடியிருப்புக்குள் புகுந்த மழை நீரால் பரபரப்பு ..!

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி கால்பந்தாட்ட மைதானத்தின் அருகாமையில் குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.
அப்பகுதியில் வடிகால் கால்வாய் இல்லாத காரணத்தால் குளம் போல் காட்சியளித்தது.
மழைநீர் வெளியே செல்ல முடியாமல் குடியிருப்புக்குள் வெள்ளப்பெருக்கு எடுப்பதுபோல் காட்சியளித்ததை பார்வையிட்ட வால்பாறை நகர மன்ற தலைவி அழகு சுந்தர வள்ளி, வட்டாச்சியர் சிவகுமார், நகராட்சி ஆணையாளர் பாலு, வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக வடிகால் கால்வாய் கட்டித் தரப்படும் என உறுதி அளித்தனர்.