ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள்… தேர்வு எழுத அனுமதி மறுப்பு.!!

கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை அணிய கூடாது என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த நிலையில் கர்நாடகாவில் இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி மனு தாக்கல் செய்த மாணவிகளில் இருவர் பொதுத்தேர்வை எழுத ஹிஜாப் அணிந்து வந்தனர்.

ஆனால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவிகள் இருவரும் தேர்வை புறக்கணித்து அமைதியாக பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறினர்.