சீனாவும், பாகிஸ்தானும் இரட்டை வேடம் போடுகிறது- இந்திய தூதர் ருசிரா காம்போஜ் கண்டனம்..!

பயங்கரவாதம் தொடர்பாக சீனாவும், பாகிஸ்தானும் இரட்டை வேடம் போடுவதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கூட்டத்தில் இந்திய தூதர் ருசிரா காம்போஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கூட்டத்தில் பேசிய இந்திய தூதர் ருசிரா காம்போஜ், உலகின் மிகவும் மோசமான மற்றும் பயங்கரவாதிகள் தொடர்பான உண்மையான மற்றும் ஆதார அடிப்படையிலான பட்டியலின் முன்மொழிவுகள் கிடப்பில் போடப்படுவது மிகவும் வருந்தத்தக்கது என சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதம் தொடர்பான கோரிக்கைகளை பட்டியலிடும்போது, அதனை எதிர்கொள்ளாமல் அதற்கு தடைகளை வைக்கும் நடைமுறையை பார்க்கும் போது சீனா மற்றும் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவது தெரிகிறது என அவர் குற்றம்சாட்டினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பாவின் கட்டளையை ஐ.நா பட்டியலில் இருந்து சீனா நிறுத்தியுள்ளது. மேலும் மக்கி மீது சீனா தொழில்நுட்ப பிடியை வைத்துள்ளது.

இந்த கூட்டத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒரு குரலில் ஒன்றாக உச்சரிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என கூறிய ருசிரா காம்போஜ், சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்தால் மட்டுமே அதற்கு தீர்வு காணமுடியும் என தெரிவித்தார்.

​​​மேலும் காபூலில் உள்ள குருத்வாரா மீதான சமீபத்திய தாக்குதல்களையும் அவர் குறிப்பிட்டு பேசினார். 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் மும்பை மற்றும் டெல்லியில் ஐநாவின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் சிறப்பு அமர்வை இந்தியா நடத்தும் என்றும் அவர் அறிவித்தார். குறிப்பாக இந்தியாவைத் தொடர்ந்து குறிவைத்து வரும் பல பயங்கரவாதக் குழுக்களைப் பற்றி அறிக்கை குறிப்பிடவில்லை என்றும் ருசிரா காம்போஜ் வருத்தம் தெரிவித்தார்.