செஸ் ஒலிம்பியாட் போட்டி: காவல் ஆணையாளர் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி – கோவை ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

செஸ் ஒலிம்பியாட் போட்டி: காவல் ஆணையாளர் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி – கோவை ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

 

44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்  போட்டி ஜூலை 28 ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்கவுள்ள நிலையில்,தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும், போட்டி குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் பல்வேறு விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

 

கோவை மாவட்டத்திலும், மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி, கல்லூரி மாணவர்கள் நடை பேரணி, அரசு அலுவலகங்களில் செஸ் போட்டிகள், பள்ளி, கல்லூரி வாகனங்களில் செஸ் போட்டியின் மாஸ்காட் லோகோ ஸ்டிக்கர்கள் ஓட்டுவது என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, கோவை மாநகர காவல் ஆணையாளர், வி, பாலகிருஷ்ணன், ஆகியோர் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில்,மாவட்ட சைக்கிளிங் அசோசியேசன் சார்பாக விழிப்புணர்வு பயணத்தை, ஆட்சியர் ஜி எஸ். சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில், மாநகர காவல் ஆணையாளர் வி. பாலகிருஷ்ணன் இளைஞர்களுடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியானது, ரேஸ்கோர்ஸ் பகுதியை சுற்றி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.