திருநங்கை கொலை வழக்கில் சென்னை பி.இ. பட்டதாரி கைது பரபரப்பு வாக்குமூலம்.!!

கோவை வடவள்ளி அருகே மருதமலை பத்திரப்பதிவு அலுவலகம் பின்புறம் அன்னை இந்திரா நகர் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் திருநங்கை ஒருவர் கடந்த 29-ந் தேதி இரவு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் கன்னையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரனை நடத்தினார்கள். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் செல்வபுரம் தெலுங்கு பாளையத்தைச் சேர்ந்த திருநங்கை சோமசுந்தரம் என்ற தனலட்சுமி (வயது 38)என்பது தெரிய வந்தது. இவர் கடந்த 3 ஆண்டுகளாக மாசிலாமணி என்பவருடன் அன்னை இந்திரா நகரில் வசித்து வந்தார். அடிககடி மும்பை சென்று விடுவாராம். தைப்பூசத்துக்கு கோவைக்கு வந்தார். ,அன்னை இந்திரா நகரில் மாசிலாமணி வீட்டில் தங்கி இருந்தார். மாசிலாமணிக்கு ஒரு  பாய் பிரண்ட் ” உள்ளார் 3 பேரும் சேர்ந்து இரவு  மது அருந்தினார்கள்.அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக இவரை கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்திருப்பதாகவும் தெரிய வந்தது.. கொலையாளியை தனிப்படை போலீசார் வலை வீசி தேடிவந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக சென்னை,மடிப்பாக்கம் பக்கம் உள்ள புழுதிவாக்கம், சிவப்பிரகாஷ் நகரை சேர்ந்த சுப்பையா மகன் தினேஷ் கந்தசாமி ( வயது 30) என்பவரை வடவள்ளி போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் இவர் பி. இ. படித்து முடித்து விட்டு பங்கு சந்தை தொழில் செய்து வருவது தெரிய வந்தது. இவர் தைப்பூச திருவிழாவுக்கு மருதமலைக்கு பெற்றோர்களுடன் வந்ததாகவும் அப்போது அவரை திருநங்கைகள் அழைத்துச் சென்று தாக்கி அவரது பணத்தை பறித்துக் கொண்டதாகவும், இதனால் பழி தீர்ப்பதற்காக இந்த கொலையை செய்தேன்.என்னை தாக்கிய முக்கிய நபரான மாசிலாமணியை தான் கொலை செய்ய திட்டமிட்டு இருந்தேன். அவர் தப்பிவிட்டார். இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..