கோவை-போத்தனூர் இடையே ரயில் சேவைகள் 37 நாட்களுக்கு மாற்றம்..!

கோவை-போத்தனூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 37 நாட்களுக்கு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையிலான வழித்தடத்தில் பராமரிப்பு
பணிகள் நடைபெற உள்ளது.இதனால் சொர்ணூரில் இருந்து தினமும் காலை 8.20
மணிக்கு புறப்பட்டு, காலை 11.05 மணிக்கு கோவை வரும் ரயில் (எண்:06458),
வரும் 12-ந் தேதி முதல் அக்டோபர் 18-ந் தேதி வரை போத்தனூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும், கோவையில் இருந்து தினமும் மாலை 4.30 மணிக்கு சொர்ணூர் புறப்பட்டுச் செல்லும் தினசரி ரயில் (எண்:06459),கோவைக்கு பதில்
போத்தனூரில் இருந்து வரும் 12-ந் தேதி முதல் அக்டோபர் 18-ந் தேதி வரை
மாலை 4.41 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
பிலாஸ்பூரில் இருந்து வரும் 12,19,26-ந் தேதி மற்றும் அக்டோபர் 3,10,17
ஆகிய தேதிகளில் புறப்பட்டு, கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் வாராந்திர
எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22815), கோவைக்கு பதில் இருகூர் – போத்தனூர்
மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும்.
நெல்லையில் இருந்து வரும் 14,21,28,-ந் தேதி மற்றும் அக்டோபர் 5,12 ஆகிய
தேதிகளில் புறப்பட்டு கோவை வழியாக தாதர் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ்
ரெயில் (22630), கோவைக்கு பதில் இருகூர்-போத்தனூர் மாற்று வழித்தடத்தில்
இயக்கப்படும்.
பிலாஸ்பூரில் இருந்து வரும் 13,20,27 மற்றும் அக்டோபர் 4,11,18 ஆகிய
தேதிகளில் புறப்பட்டு, கோவை வழியாக நெல்லை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ்
ரெயில் (22619), கோவைக்கு பதில் இருகூர்-போத்தனூர் மாற்றுவழித்தடத்தில்
இயக்கப்படும்.
பாட்னாவில் இருந்து வரும் 13,20,27, அக்டோபர் 4,11,18 ஆகிய தேதிகளில்
புறப்பட்டு கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்
(எண்:22670), கோவைக்கு பதில் இருகூர்-போத்தனூர் மாற்று வழித்தடத்தில்
இயக்கப்படும்.
செகந்திராபாத்தில் இருந்து வரும் 16,23,30-ந் தேதி மற்றும் அக்டோபர் 7,14
ஆகிய தேதிகளில் புறப்பட்டு கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் வாராந்திர
எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:07189), கோவைக்கு பதில் இருகூர்-போத்தனூர் மாற்று
வழித்தடத்தில் இயக்கப்படும். கோவை வழியாக இந்த ரயில்கள்
இயக்கப்படாததால், போத்தனூரில் இந்த ரயில்கள் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.