ஆன்லைனில் ஆர்டர் செய்த செல்போன் : வாடிக்கையாளரிடம் ஒப்படைக்காமல் மோசடி செய்த டெலிவரி பாய் கைது ..!

Close up of a man using mobile smart phone

கோவை பூ மார்க்கெட் மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா ( வயது 30 )இவர் அவினாசி ரோடு லட்சுமி சிக்னல் அருகே உள்ள ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் ஊழியரக ( டெலிவரி மேன்) வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி இந்த நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் ரூ.41 ஆயிரத்து 999 ரூபாய் மதிப்புள்ள செல்போன் ஆர்டர் செய்திருந்தார். அந்த செல்போனை ராஜேஷ் கண்ணா குறிப்பிட்ட நபருக்கு டெலிவரி செய்யாமல் அபகரித்துக் கொண்டதாக தெரிகிறது .இது குறித்து மேலாளர் கிறிஸ்டோபர் பெர்னாண்டஸ் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் கிருஷ்ண லீலாவழக்கு பதிவு செய்து டெலிவரி மேனாக வேலை பார்த்த ராஜேஷ் கண்ணாவை கைது செய்தார்.செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.