கோவை துணிக்கடையில் ரூ.23 லட்சம் அபேஸ் செய்த கேஷியர் தலைமறைவு -போலீஸ் வலை.!

கோவை ஒப்பணக்கார வீதி- பெரிய கடைவீதியில் சந்திப்பில் ஒரு துணிக்கடை உள்ளது. இங்கு கேஷியராக ஆனந்த் என்பவர் வேலை பார்த்து வந்தார். வாரத்துக்கு ஒரு முறை துணிக்கடை கணக்குகளை ஆய்வு செய்வது வழக்கம். சமீபத்தில் கணக்கு மேலாளர் பிரகாஷ் ஆய்வு செய்தார் . ஆய்வு செய்தபோது ரூ 23 லட்சத்து 10 ஆயிரம் வரவு வைக்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கடையில் கேஷியராக பணியாற்றிய ஆனந்த் கடந்த 2ஆம் தேதி ரூ. 11 லட்சத்து 10 ஆயிரத்து எடுத்துச் சென்றதும் ரூ 12 லட்சத்தை துணிக்கடை உரிமையாளர் கேட்டதாக கூறி தலைமை காசாளரிடம் வாங்கிச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது .இந்த மோசடி குறித்து கணக்கு மேலாளர் பிரகாஷ் உக்கடம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ஆனந்த் மீது மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.