கோவை, சி.பி.எஸ்.இ., மாண வர்களுக்கான 10-ம் வகுப்பு, பிளஸ்-2 முக்கிய பாடங்களுக்கான தேர்வு, இன்று தொடங்குகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு,10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு, கடந்த வாரம் தொடங்கியது. ஆனால், முக்கியப் பாடங்களுக்கான தேர்வு, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடக்கிறது. கோவை மாவட்டத் தில், இந்த தேர்வுகளை 110 பள்ளிகளை சேர்ந்த, 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களுக்கு, 35 பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10-ம் வகுப்புக்கு, காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை, தமிழ், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட 8 மொழி பாடத்தேர்வு நடக்கிறது.
தொடர்ந்து 27-ந் தேதி ஆங்கில பாடத்தேர்வு நடக்கிறது. மார்ச் 21-ந் தேதி, கணக்குத் தேர்வுடன், அனைத்து பாடத்தேர்வுகளும் முடிவடைகின்றன.பிளஸ்-2 மாணவர்களுக்கு, இன்று (வெள்ளிக்கிழமை) ஆங்கில தேர்வுடன் முக்கிய பாடத் தேர்வுகள் தொடங்குகின்றன. வருகிற 28-ந் தேதி இயற்பியல் பாடத்தேர்வு நடக்கிறது. ஏப்ரல் 5-ந் தேதி, சைக்காலஜி பாடத்துடன் அனைத்து தேர்வுகளும் நிறைவடைகின்றன. தேர்வு முடிந்ததும், மாணவர்களின் விடைத்தாள்கள், சென்னை, மண்டல அலு வலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். தேர்வு மையங்களில், அனைத்து பாதுகாப்பு ஏற் பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு தேர்வு விதிமுறைகள், பள்ளிகளில் விளக்க உத்தர விடப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
Leave a Reply