குத்தகை விவசாயி தான் குத்தகை செய்யும் நிலத்தில் நெல், வாழை, கரும்பு, எள் போன்றவை சாகுபடி செய்தால் தான் தனது வாழ்வாதாரத்தையும், விவசாயத்தியும் காக்க முடியும் என்று தமிழ்நாடு வேளாண்மை துறையே கூறுகிறது. ஆனால், திருச்சி வருவாய் நீதிமன்ற நீதிபதி குத்தகை விவசாயிகள் நெல் சாகுபடி மட்டுமே செய்ய வேண்டும். வேறு எந்த பயிறும் சாகுபடி ...

கோவையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர கோவை – அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் தொட்டிபாளையம் பிரிவு வரை புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உப்பிலிபாளையத்தில் பழைய மேம்பாலம் 4 ரோடு சந்திப்பில் ...

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகள் , மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் ...

சென்னை புளியந்தோப்பு டிகாஸ் சாலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவர் கடந்த 6 மாதமாக எலெக்ட்ரீசியன் ஹெல்பர் வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை பாரிமுனை லோன்ஸ் ஹொயர் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சிறுவன் சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்கள் 3 பேருடன் ...

திரிபுராவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் என்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அந்த மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை புயலாக வலுப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது. சூறாவளி புயலின் தாக்கமானது ...

ரஃபா: காசாவின் ரஃபா நகரில் நடைபெற்று வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் கோரிக்கையை ஆதரிக்கும் நீதிமன்றம், ரஃபாவில் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஹமாஸ் வரவேற்றுள்ள நிலையில், இஸ்ரேல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில் தெற்கு நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தனது ...

கோவை வடவள்ளி,ஐஓபி காலனி காமாட்சி நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 57) பாரதியார் பல்கலைக்கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் பல்கலைக்கழக வளாகத்தில் பணியில் இருந்த போது இவரை அங்கு வந்த காட்டுயானை தாக்கியது.இதில் படுகாயம்அடைந்தார் . சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து வடவள்ளி போலீசில் ...

கோவை சரவணம்பட்டி – துடியலூர் ரோட்டில் ராமன் விகார் என்ற பெயரில் ராணுவ குடியிருப்பு உள்ளது.இங்கு மொத்தம் 400 வீடுகள் உள்ளன. இங்கு சிறுவர்கள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை பூங்காவில் உள்ள சறுக்கி விளையாடும் கம்பத்தில் ஏரி 2 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த குழந்தைகள் திடீரென்று கீழே விழுந்தனர்.குழந்தைகளை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு ...

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி,உலாந்தி, மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரகப் பகுதிகளில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம் .அதேபோல இந்த ஆண்டு வழக்கம் போல 32 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேற்று 23 ஆம் தேதி தொடங்கி இன்றும் நாளையும் நடைபெறுகிறது. ஆனைமலை புலிகள் காப்பக ...

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் ( வயது 59 )இவர் கோவை ரயில் நிலையம் ரோட்டில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் “டேட்டா “பதிவு ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார் .எஸ் . பி . அலுவலகம் அருகே உள்ள வருவாய் ஊழியர்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். இவர் குடிப்பழக்கம் உடையவர். ...