அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு `3 ஷிப்டுகள்’ – அரசாணை வெளியீடு..!

மிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகள் , மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை (1 ஷிப்ட் ) என்றும், பிற்பகல் 1 மணி முதல் இரவு 9 மணி வரை (2 ஷிப்ட) மற்றும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை (3 ஷிப்ட) என நேர ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஷிப்ட் முறையின் அடிப்படையில் சுழற்சி பணியாக வழங்கவும். பணியில் உள்ள செவிலிய உதவியாளர் தரம்-2 மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவமனைப் பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர்களில் (டி குரூப்) 50 சதவீதம் பேர் முதல் சுழற்சியிலும், 25 சதவீதம் பேர் 2 ம் சுழற்சியிலும் மற்றும் 25 சதவீதம் பேர் 3 ம் சுழற்சியிலும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்ட்டுள்ளது.