திமுக செய்தித் தொடர்பாளராக இருந்து வந்தவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் தி.மு.க-வின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு ...

18 மாதங்களுக்குள் பொதுத் துறையில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் வழங்கினார் என்றும் அதன் படி 75,000 இளைஞர்களுக்கு அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘சொன்னதை செய்வார் ...

சென்னை: அரசியலிலிருந்து விலகுவதாக நமது எம்ஜிஆர் மற்றும் நமது அம்மா நாளிதழ்களின் முன்னாள் ஆசிரியரான மருது அழகுராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: எழுத்து, பேச்சு உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் என்னை விடுவித்துக் கொள்கிறேன். இது காலம் வரை முதுகு தட்டி கொடுத்தவர்களுக்கு நன்றி. என் கருத்துகளால் யாரேனும் ...

மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமா ? தமிழக அரசு: பண்டிகை காலத்தில் குடும்பங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் – பா.ஜ.க மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மோடி மகள் திட்டம்: தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு ரூ.10,000 கல்வி உதவி தொகை – பா.ஜ.க, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ...

பிரிட்டன்: இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். லிஸ் ட்ரஸ் பதவியேற்ற 45 நாட்களுக்குப் பிறகு ராஜினாமா செய்தார். பிரதம மந்திரி லிஸ் ட்ரஸ் இன்று ராஜினாமா செய்தார். அதே நேரத்தில் இங்கிலாந்து உள்துறை செயலாளர் நேற்று ராஜினாமா செய்தார். ...

ஆறுமுக சாமி அறிக்கை ப்ரொபஷனல் கிடையாது- அன்புமணி ராமதாஸ். கோவை விமான நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் உள்ள பின்னலாடை தொழில் அதிகமாக கொங்கு பகுதியில் உள்ளதாகவும் தற்போது 40% ஆர்டர் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அத்திகடவு திட்டம் ஏன் இன்னும் முடிக்கவில்லை? என ...

காய்ச்சலுக்காக தொடங்கப்பட்ட சிறப்பு முகாம்கள் பருவமழை முடியும் வரை செயல்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நடக்கலாம் வாங்க கோரிக்கை மனுக்களை தாங்க’ என்னும் பெயரில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அதிகாலை நடைபயிற்சி செல்லும் போது, பொதுமக்களை அவர்களது இல்லம் தேடி சென்று கோரிக்கை மனுக்களை பெறும் நடவடிக்கையில் அமைச்சர் மா.சுபிரமணியன் ஈடுபட்டார். ...

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யார், யார் குற்றவாளிகளோ அவர்கள் நிச்சயமாக கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று முன்தினம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணை ஆணைய ...

குஜராத் ராஜ்கோட்டில் பிரதமர் மோடியின் ஊர்வலத்தில் கூடியிருந்த இஸ்லாமிய சமூகத்தினர் உட்பட பொதுமக்கள் அனைவரும் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி அம்மாநிலத்தில் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ள பிரதமர் மோடி, ராஜ்கோட்டில் திறந்த காரில் ஊர்வலம் சென்றார். ...

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில் நாட்டின் பொருளாதார நிலையும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இதில் பலர் போட்டியிட்டனர். பிரிட்டனின் முன்னாள் நிதி அமைச்சரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி ...