குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டி..!!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஜூலை 19ம் தேதி கடைசி நாளாகும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ஜெகதீப் தன்கர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவருடன் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.