சென்னை: மெரீனா கடற்கரையில் கருணாநிதி நினைவுச்சின்னம் அருகே கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு முதற்கட்ட அனுமதி அளித்துள்ளது. பேனா நினைவுச்சின்னம் அமைக்க முதற்கட்ட அனுமதி கிடைத்துள்ளதாகவும் பல்வேறு கட்ட அனுமதிகளை பெற வேண்டியுள்ளதாகவும் தமிழக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக ...
பழங்குடியினத்தவர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்டோரை சேர்க்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள நரிக்குறவ மக்கள் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்கிறார்கள். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நரிக்குறவ பெண் அஸ்வினி பேசுகையில் , வணக்கம் என் பேரு ...
புதிய தேசிய கல்விக் கொள்கையில் காலை சிற்றுண்டி திட்டம் இருக்கிறது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள தமிழிசை, 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை மதிய உணவோடு காலை சிற்றுண்டி குழந்தைகளுக்கு கொடுக்க வலியுறுத்துகிறது. தாய்மொழி உணர்வோடு கூடிய உலகத்தரம் வாய்ந்த ...
கோவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடக்கம் கோவை ராமநாதபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். ரூ.33.56 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது இந்த ...
யாகூப் மேமனின் ஏஜெண்டாக இருப்பதை விட மோடி மற்றும் அமித் ஷாவின் ஏஜெண்டுகளாக இருப்பது நல்லது என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். சிவ சேனா தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே மும்பையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில் கூறியதாவது: யாகூப் மேமன் ஒரு துரோகி. அவர் தூக்கிலிடப்பட்டார். அவரது கல்லறை மகிமைப்படுத்தப்பட்டது. ...
இந்துக்கள் குறித்து ஆ.ராசா பேசியுள்ள வீடியோ சர்ச்சைக்குள்ளான நிலையில் அதற்கு தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்துக்கள் யார்? என்பது குறித்து திமுக எம்.பி ஆ.ராசா பேசிய வீடியோ ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, ஆ.ராசா இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் பேசி வருவதை கண்டித்து பதிவிட்டிருந்தார். ...
இந்துக்கள் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில் அந்தர் பல்டி அடித்துள்ளதாக நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். முன்னாள் அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தனது ஆவசேமான பேச்சால் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆ.ராஜா;- நீ கிறிஸ்தவனாக இஸ்லாமியனாக பெர்சியனாக ...
திமுக தலைவர் வீரமணியின் பாராட்டு விழாவில் ஆ.ராசா பேசிய போது, “உச்சநீதிமன்றம் இந்துவாக தான் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? ஹிந்துவாக நீ இருக்கும் வரை நீ ஒரு சூத்திரன். இந்துவாக இருக்கும் வரை நீ ஒரு விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ ஒரு ...
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியை பொறுத்த வரைக்கும் எந்த பதவியும் வெங்காய பதவி கிடையாது, பணம் சம்பாதிப்பதற்கு, நம்முடைய பெருமையை பீற்றிக் கொள்வதற்கு பாரதிய ஜனதா கட்சியில் எந்த பதவியும் இல்லை. ஒரு காரிய கார்த்தனுக்கு என்ன மரியாதை இருக்கிறதோ, அதே மரியாதையை தான் மாநிலத் தலைவருக்கும் ...
புதுடெல்லி: ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்ட பி17ஏ ரக போர்க்கப்பலான தரகிரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “எம்.டி.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்ட பி17ஏ ரக போர்க்கப்பலான தரகிரியை கடற்படை மனைவியர் நல சங்கத்தின் (மேற்கு பிராந்தியம்) தலைவர் சாரு சிங் இன்று அறிமுகப்படுத்தினார். ...













