தமிழ் சினிமாவின் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் மகனாகவும் தற்போது சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர். இதனிடையே இவர் பதவியேற்றதிலிருந்து தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். மேலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் திரையரங்கு வினியோகஸ்தர் உரிமையையும் ...
சென்னை: பாஜக சிறுபான்மையினர் அணி நிர்வாகி டெய்சி சரணிடன்,பாஜக ஓபிசி அணி நிர்வாகி திருச்சி சூர்யா தொலைபேசியில் ஆபாசமாக பேசிய விவகாரம் குறித்து விசாரிக்க பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண்க்கும் OBC அணியின் மாநில ...
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சியாஞ்சூர் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக ...
வனத்துறை எச்சரிக்கை: அலட்சியப்படுத்தும் தி.மு.க வினர் கோவையில் செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் கோவை மருதமலையில் முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் அடிவார பகுதியில் இருந்து மலைக்கு செல்ல வனத்துறை அனுமதி இல்லை. காட்டு யானைகள் நடமாட்டம் மற்றும் வன விலங்குகள் அங்கு குடிநீர் மற்றும் உணவுக்காக மருதமலை வனப் பகுதியில் சுற்றி திரிவது ...
சென்னை: பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறி வருகிறது என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகஉளவுத் துறை ஆழ்ந்த உறக்க நிலையில் உள்ளது. இதனால், தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. மங்களூரு குண்டுவெடிப்பு குறித்த முதல்கட்ட விசாரணையில், ஷரீக், போலி அடையாள ...
சென்னை: மத்திய அரசின் ரோஜ்கார் மேளா எனப்படும் வேலைவாய்ப்பு கண்காட்சி இன்று நடக்கிறது. அந்த கண்காட்சியில் பங்கேற்கும் 71 ஆயிரம் பேருக்கு காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்குகிறார். கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாக ...
லண்டன்: பிரிட்டன் இப்போது மிக மோசமான ஒரு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் எடுத்த தவறான முடிவுகளால் பொருளாதாரம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் அழுத்தம் அதிகரிக்க லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார். இதையடுத்து பிரிட்டன் ...
வாஷிங்டன்: சமீபத்தில் நடந்த முடிந்த ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி- பைடன் இடையே நடந்த சந்திப்பு முக்கியமானதாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாக அமெரிக்க டாப் அதிகாரிகள் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தனர். ஜி20 மாநாடு சமீபத்தில் தான் இந்தோனேசியாவில் நடந்து முடிந்தது. இதில் உலகின் டாப் 20 பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து ...
அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வாதத்தை ஏற்று வழக்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்து இருந்தது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் ...
சென்னை: தாம்பரம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெடிகுண்டு வீசியும், அரிவாளாலும் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேரை அதிரடியாக தனிப்படையினர் கைது செய்துள்ளனர். அண்ணன், தம்பியை கொலை செய்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அவரை பழிக்குப்பழி வாங்கியதாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். தாம்பரம் அருகே மாடம்பாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஸ்கெட்ச் (எ) ...













