சென்னை: புத்தொழில் தொடர்பான தமிழக அரசின் முன்னோடி செயல் திட்டங்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். சென்னையில் உலகத்தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான குளோபல் தமிழ் ஏஞ்சல்ஸ் இணையதள தொடக்க விழா நடைபெற்றது. மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழகத்தைச் சேர்ந்த புத்தொழில் ...
பொங்கல் கரும்பு கொள்முதலில் விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் ஒரு கரும்பிற்கு 15 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பிற்காக கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு நிர்ணயித்துள்ள விலையில், பாதியளவு மட்டுமே வழங்கப்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது. கரும்பு ஒன்றுக்கு ரூபாய் 33 என்று அறிவித்துவிட்டுக் கொள்முதலின்போது ...
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையோடு கூட்டம் தொடங்கியதும், திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆளுநர் இருக்கையை முற்றுக்கையிட்டு முழக்கம் எழுப்பினர். அப்போது தமிழ்நாடு எங்கள் நாடு எனவும் ஆளுநரை சட்டப்பேரவையில் இருந்து வெளியேறவேண்டும் என கோஷமிட்டனர். இதனையடுத்து திமுக கூட்டணி கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை படிக்கும் போது ...
டெல்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், நீரிலிருந்து பசுமை ஹட்ரோஜனை பிரித்து எடுத்து எரிபொருளாக பயன்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது. ரூ.19,744 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தில் தனியாரை இணைந்து செயல்பட மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. இந்தியாவில் கார்பன் இல்லாத எரிபொருளை ...
சிம்லா: இமாச்சல பிரதேச அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் அமைச்சரவையின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. இதையடுத்து கடந்த டிசம்பர் 11ம் தேதி காங்கிரஸ் ...
தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடர்பான முக்கிய அறிவுரைகளை மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ளார். நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் உறுதி செய்து கொள்ள வேண்டும். பொங்கல் பொருட்களுக்கு என தனியே பெறப்பட்ட (White Colour Bag) அரிசி மற்றும் சர்க்கரை மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும். ஏற்கனவே இருப்பில் உள்ள பச்சரிசி ...
கோவை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 53) இவர் கோவை நஞ்சுண்டாபுரத்தில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். இவர் தனது முகநூல் பக்கத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்து ஆபாசமாகவும் ,அவதூறு பரப்பும் வகையிலும், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட பாஜக தலைவர் ...
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்தது முதலாக திமுக கட்சி கொள்கைகள் குறித்தும், மத அமைப்பு குறித்ததுமான பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. அடிப்படையில் கடவுள் மறுப்பு கொள்கையில் வளர்ந்த கட்சியாதலால் இவ்வாறான கருத்துகள் எழுந்தாலும், பல்வேறு மதம் சார்ந்த, கோவில் சார்ந்த வளர்ச்சி பணிகள் மூலம் தாங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மதிப்பதாக திமுக வெளிப்படுத்தி வருகிறது. ...
சென்னை: போராட்டத்தில் ஈடுபடும் தற்காலிக செவிலியர் பிரதிநிதிகளுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல்துறையின் ‘சிற்பி’ திட்டத்தின் கீழ், 5000 மாணவ மாணவிகளுக்கான யோகா பயிற்சி வகுப்பு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். பின்னர் ...
அதிமுகவின் தலைமைப் பதவிக்கு தற்போது தேர்தல் நடைபெற்றாலும் தாம்தான் கட்சியின் ஒற்றை தலைமையாக வருவேன் என உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இரு ...