அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போதைய சூழலில் ஈபிஎஸ்-ஐ அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்றும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை ஆணையம் இன்னும் ஏற்கவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ...

அனைத்து சவிதமாக மக்களுக்கும் அவர்கள் கனவை நிறைவேற்றும் வண்ணம் அமைந்துள்ளது. -பிரதமர் நரேந்திர மோடி. இன்று பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023- 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் மூலம், வருமான வரி விலக்கு , வருமான வரி உச்சவரம்பு உயர்வு, சிறுகுறு தொழில்களுக்கு கடனுதவி, நூலகம் அமைப்பது , புதிய நர்சிங் ...

தேசிய கல்விக்கொள்கையை உலக அளவில் கொண்டு செல்வதற்கு ஜி20 கல்விக்குழு கருத்தரங்கம் பயனுள்ளதாக இருக்கும் எனவும், தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற G20 முதல் கல்வி பணிக்குழுவின் கூட்டத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் சார்பாக செந்தில்முருகன் போட்டி என ஓபிஎஸ் அறிவிப்பு. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமது தரப்பில் போட்டியிடும் வேட்பாளரை இன்று மாலை 5 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை பசுமை வழிசாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ், ஈரோடு கிழக்கு தொகுதி ...

சென்னை: ஒன்றிய அரசின் 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக பச்சை கொடி காட்டியுள்ளது என தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ் மாநில தலைவர்): நடைபெறவுள்ள மாநில சட்டமன்றப் பேரவை தேர்தல்களை மனதில் கொண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தயாரித்திருக்கிறார். பிரதமர் மோடியின் மிக நெருங்கிய நண்பர்களின் வருவாய் நாள் ...

ஈரோடு கிழக்கு தொகுதி கிருஷ்ணசாமி வீதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் மற்றும் கௌதம் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் வீட்டில் மசாலா பொடி, தேன் மற்றும் செக்கு எண்ணெய் போன்ற பொருட்களை வீட்டில் வைத்து தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். இதில் கார்த்திகேயன் என்பவர் ஈரோடு கிழக்கு ...

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2&ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள். இந்த தேர்தலில் நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. அதன் பிறகு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். ...

ஈரோடு: கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், கூட்டணிக் கட்சிக்காக தனது வாய்ப்பை விட்டுக் கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ.கே.எஸ்.தென்னரசு, தற்போதைய ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடக்கிறது. இத்தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்நிலையில், அதிமுக சார்பில் முன்னாள் ...

சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா? அமைச்சர் சேகர்பாபு பதிலடி. நேற்று சென்னை கலைவாணர் அரங்கில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ...

2023 – 24ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இவர் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இதுவாகும். மேலும் தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட்டும் இதுவே. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட்டும் இதுவே. அறிக்கை தாக்கலில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ...