அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் தொண்டர்களோடு சேர்ந்து இபிஎஸ் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், ...

காந்திநகர்: இன்று(மே 12) குஜராத் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி சுமார் ரூ.4,400 மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார். இது குஜராத்தின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இன்று குஜராத்தில் அகில பாரதிய சிக்ஷா சங்க அதிவேஷன் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் காலை 10.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதன் பின்னர் ...

மதம் மாறி செல்பவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கக் கூடாது என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர் சந்திப்பு தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொஞ்சம் கொஞ்சமாக ...

கோவை தெற்கு தொகுதி புலியகுளம் அருகே உள்ள அம்மன் குளம் பகுதியில் 66 வது வார்டில் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திர திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இயந்திர மையத்தை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவங்கி வைத்தார். ...

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றப்படவிருப்பதாகக் கடந்த சில வாரங்களாகவே பேச்சுக்கள் அடிபட்டன. அதுவும் நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் பேசியது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியான பிறகு எழுந்த இந்த பேச்சில், நிதித்துறை உள்ளிட்ட பல இலாகாக்கள் மாற்றப்படப்போவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ-வுமான டி.ஆர்.பி.ராஜா புதிதாக அமைச்சரவையில் இடம்பெறப்போவதாகவும் செய்திகள் உலாவின. ...

பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட நடிகை நமீதா, அண்மையில் கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுப்பட்டார். இந்நிலையில், நடிகை நமீதா தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கபாலீஸ்வரர் கோயில் 1008 தாமரை பூக்களால் சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த பிறந்தநாள் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் என்னுடைய ...

தமிழக அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பதவியேற்க உள்ள நிலையில் மேலும் 5 அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2021-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றபோது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 34 ...

சொத்துப் பட்டியல் வெளியிட்ட விவகாரம் தொடா்பாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை மீது முதல்வா் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளாா். திமுக அமைச்சா்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி, அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் டி.ஆா்.பாலு, கனிமொழி, கலாநிதி வீராசாமி, ஜெகத்ரட்சகன், கதிா் ஆனந்த், ...

இன்று ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பொறுப்பேற்கிறார் டி.ஆர்.பி.ராஜா.. தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மன்னார்குடி சட்டமன்ற தொகுதியை சார்ந்த டி.ஆர்.பி. ராஜாவுக்கு அத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று காலை 10:30 ...

சென்னை: மணிப்பூரில் மோரே பகுதியில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகம் திரும்ப விரும்பிய 5 மாணவர்களுக்கு விமான டிக்கெட் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல், அங்குவசிக்கும் தமிழ் மக்கள் உட்பட ஏராளமானவர்கள் பாதுகாப்பற்ற ...