செந்தில் பாலாஜி மீது தவறில்லை என்றால் அதனை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்புள்ளது என வானிதி சீனிவாசன் அறிக்கை.. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து, பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது என கோவை பாஜக எம்எல்ஏ வானிதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ...

கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜி நலம் பெற வேண்டி திமுகவினர் கோயிலில் சிறப்புப் பூஜையில் ஈடுபட்டனர். அமலாக்கத் துறை சோதனையைத் தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி புதன்கிழமை நள்ளிரவு 2.15 மணியளவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அமைச்சர் ...

டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் ஜூலை 14ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராக உத்தரவு.. திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டிஆர் பாலு தொடர்ந்த வழக்கில் ஜூலை 14-ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் கட்சியின் மூத்த ...

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் செய்தியாளர்களிடம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ...

செந்தில் பாலாஜியை நீக்கியவர் ஜெயலலிதா செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், 2015 ஆண்டு தொடரப்பட்ட வழக்கு என மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். இந்த வழக்கின் காரணமாக 2015 ஆம் ஆண்டு அமைச்சர் அவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா என கூறினார். ...

பெங்களூருவில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆகியோர் மீது பாஜக அவதூறு புகார் அளித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மற்றும் சிட்டிங் எம்.பி.க்கள்/எம்.எல்.ஏக்கள் தொடர்பான கிரிமினல் வழக்குகளை கையாள்வதற்காக பிரத்யேகமான சிறப்பு நீதிமன்றம், ...

தமிழக அரசுக்கு மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் கேபினட் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததை தொடர்ந்து தமிழக அரசியல் பயங்கர சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதாவது சிபிஐ தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் மத்திய ...

ஓமந்தூரார் மருத்துவமனையில்  சிகிச்சையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நேற்று உத்தரவிட்டிருந்தார்.  அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதற்கிடையே அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை ...

கோவையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் பஸ் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் அருகே, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்குள் கடந்த 12 ...

கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கிற்கு சொந்தமாக கரூரில் உள்ள அவரது அபெக்ஸ் இம்பெக்ஸ் அலுவலகத்துக்கு இன்று அமலாக்கத்துறையினர் அதிரடியாக சீல் வைத்துள்ளனர். மேலும் அதன் அருகே ஒட்டப்பட்டுள்ள நோட்டீசில் பரபரப்பான தகவல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் செந்தில் பாலாஜியின் தம்பிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ...