போபால்: மத்தியப்பிரதேசத்தில் ஜன் ஆசிர்வாத யாத்திரையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மக்களை சந்தித்து ஆசிர்வாதம் பெறவும், ஆதரவு திரட்டும் வகையிலும் பாஜ சார்பில் 5 ஜன் ஆசிர்வாத யாத்திரைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் ...

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டம் கட்சியின் நாடாளுமன்ற கட்சியின் தலைவா் சோனியா காந்தி தலைமையில் அவரின் ஜன்பத் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.5) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. வரும் செப்டம்பா் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடா் நடைபெற உள்ளது. சோனியா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற சிறப்புக் ...

புதுடெல்லி: 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் பிரதமர் மோடி பணியாற்றி வருவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது. குஜராத் முதல்வராக இருந்த மோடி, 2014-ல் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து நாட்டின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். 2019 தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றதைத் ...

ஒரு பெண் ஒரு வழக்கு கொடுத்ததுக்கு பின் சீமான் பயந்துவிட்டார் என்பதை இப்போதுதான் பார்க்கின்றேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். என் மண் என் மக்கள் நடைபயண யாத்திரையை பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாம் கட்டமாக இன்று தென்காசியில் இருந்து மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகை ...

சென்னை: 28 எதிர்க்கட்சிகளைக் கொண்ட “இந்தியா” கூட்டணி தலைவர்கள் தற்போது தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு பேச்சு விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சனாதன ஒழிக்கப்பட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இதனை பாஜக, சனாதன தர்மத்தை பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய வேண்டும் என உதயநிதி பேசிவிட்டார் என ...

சென்னை: பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்காக முரசொலி அறக்கட்டளை தரப்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் என தற்போதைய மத்திய இணை அமைச்சரான எல்.முருகன், ...

வாஷிங்டன்: ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை ...

மக்களவை தேர்தலுக்கு முன்பும் தேர்தல் சமயத்திலும் 10 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட் பாஜக தலைவர்கள் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய ...

பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து தீர்வு பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி தமிழ்நாடு முழுவதும் கலைஞர் ...

சென்னை: கடந்த 2016-ம் ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்டு அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகள், தனி மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் அனுமதியளிக்க 6 மாதம் அவகாசம் வழங்க முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: கட்டுமானப் பொறியாளர்கள், கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், 44 கோரிக்கைகளை ...