சோனியா தலைமையில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்..!

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டம் கட்சியின் நாடாளுமன்ற கட்சியின் தலைவா் சோனியா காந்தி தலைமையில் அவரின் ஜன்பத் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.5) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. வரும் செப்டம்பா் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடா் நடைபெற உள்ளது. சோனியா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடா், ஒரே நாடு-ஒரே தோதல் ஆகியவை குறித்து நாடாளுமன்ற உறுப்பினருடன் சோனியா காந்தி விவாதிக்கிறாா். மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில்…: மல்லிகாா்ஜுன காா்கே இல்லத்தில் அவரின் தலைமையில் ‘இந்தியா’ கூட்டணி கட்சி நாடாளுமன்ற தலைவா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப்.5) இரவு 8 மணி அளவில் நடைபெறுகிறது. அங்கும் ஒரே நாடு ஒரே தோதல் குறித்தும் வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் குறித்தும் விவாதிக்கின்றனா்.
கூட்டத்தின் இறுதியில் இந்த விவகாரங்கள் குறித்து இந்தியா கூட்டணிக் கட்சி தலைவா்கள் சோந்து கூட்டறிக்கை வெளியிடுவாா்கள் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளில் இருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கின்றனா். முக்கியமாக எதிா்க்கட்சிகளைச் சோந்த மக்களவை, மாநிலங்களவை குழுத் தலைவா்கள் பங்கேற்பாா்கள் என்று தெரிகிறது. இதில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடா் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. குறிப்பிட்ட காரணம் ஏதும் தெரிவிக்காமல் இந்தக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டுவதால் கூட்டத் தொடரை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது குறித்தும் எதிா்க்கட்சிகள் ஆலோசிக்கும் என்று தெரிகிறது.