பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநர் தேடுதல் குழு அறிவிப்பை வெளியிட்டதை சட்டப்படி எதிர்கொள்வோம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். சென்னை: இது தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டு உள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உயர் கல்வித் துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இந்த பல்கலைக்கழகங்களுக்கென தனித்தனியே சட்டம் மற்றும் ...
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் மீது மதுரை காவல் துறையினர் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும் என அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா நேற்று முன்தினம் (செப். 4) ...
போதைப் பொருட்களில் இருந்து தமிழகம் மீட்டெடுக்கப்படப் போவது எப்போது? என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவா எனப்படும் போதைப் பாக்குகளை சாப்பிட்டு வகுப்பறையில் போதையில் உறங்கிய மாணவனை கண்டித்த ஆசிரியர், அந்த மாணவனால் கொடூரமாகத் ...
உலகளாவிய புவிசார் அரசியல் காரணமாக பதட்டங்கள் இருக்கும் ஒரு முக்கியமான நேரத்தில் வளரும் நாடுகளின் குரலை வலுப்படுத்த முடியும் என்பதை ஜி-20 நாடுகளை இதற்கு முன்பு தலைமையேற்று நடத்திய இந்தோனேசியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்த இந்தியாவும் உறுதி செய்துள்ளது. வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் ஜ-20 உச்சி மாநாடு ...
ஜி20 உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் முதல் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த உச்சி மாநாடு தொடங்கும் 8ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரவு விருந்து அளிக்கவுள்ளார். இதற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு ...
திருச்சி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடா்பாக ஆராய அமைக்கப்பட்ட குழுவில் தென்னிந்தியப் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக திமுக எம்பி தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார். மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் ஜமால் முகமது கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில கைப்பந்துப் போட்டியை ...
போபால்: மத்தியப்பிரதேசத்தில் ஜன் ஆசிர்வாத யாத்திரையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மக்களை சந்தித்து ஆசிர்வாதம் பெறவும், ஆதரவு திரட்டும் வகையிலும் பாஜ சார்பில் 5 ஜன் ஆசிர்வாத யாத்திரைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் ...
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டம் கட்சியின் நாடாளுமன்ற கட்சியின் தலைவா் சோனியா காந்தி தலைமையில் அவரின் ஜன்பத் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.5) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. வரும் செப்டம்பா் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடா் நடைபெற உள்ளது. சோனியா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற சிறப்புக் ...
புதுடெல்லி: 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் பிரதமர் மோடி பணியாற்றி வருவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது. குஜராத் முதல்வராக இருந்த மோடி, 2014-ல் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து நாட்டின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். 2019 தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றதைத் ...
ஒரு பெண் ஒரு வழக்கு கொடுத்ததுக்கு பின் சீமான் பயந்துவிட்டார் என்பதை இப்போதுதான் பார்க்கின்றேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். என் மண் என் மக்கள் நடைபயண யாத்திரையை பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாம் கட்டமாக இன்று தென்காசியில் இருந்து மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகை ...











