வீடுகளில் சேகரிக்கும் குப்பைகள்: சாலையில் வீசி செல்லும் கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் – செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் !!! கோவை, வடவள்ளி பகுதிகளில் வீடுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை அப்பகுதி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அதனை சேகரித்து லாரிகள் மூலம் எடுத்துக் கொண்டு குப்பை கிடங்கு கொண்டு சென்று கொட்டுவது ...

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. அப்போது ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.4 கோடி எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 ...

பெங்களூர்: தன் மகன் பிரஜ்வல் தொடர்புடைய 3,000 ஆபாச வீடியோக்கள் 5 ஆண்டுகளுக்கு முந்தைய விவகாரம்.. இதனை இப்போது கிளப்பிவிட்டிருக்கின்றனர்.. எங்கள் குடும்பத்துக்கு சத்திய சோதனை ஏற்பட்டிருக்கிறது என பிரஜ்வல் தந்தையும் பலாத்கார குற்றச்சாட்டுகளுக்குள்ளானவருமான ரேவண்ணா தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவுகவுடான் மகன் ரேவண்ணா. இவரது மகன் பிரஜ்வல்தான் 3,000 ஆபாச வீடியோக்களில் சிக்கியவர். பல ...

கோடநாடு கொலை – கொள்ளை வழக்கு விசாரணைக்காக 4 பேர் தனிப்படை முன் ஆஜர் !!! நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்குதாரராக இருந்தார். அவர் மறைவிற்குப் பின் 2017 ஏப்ரல் 24- ஆம் தேதி கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் பங்களாவில் கொலை செய்யப்பட்டார். ...

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அதற்கு முன்பாக தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கடும் வெயிலில் பயணம் செய்து, தீவிரமாக ஓட்டு வேட்டையாடினார். வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை ...

கோவை நாடாளுமன்றத் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றத்தில் மனு கோவை மாவட்டத்தில் மொத்தம் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர். கோவையில் மொத்த வாக்குப் பதிவு சதவீதம் 64.81%, தமிழகத்தில் மொத்த வாக்குப் பதிவு சதவீதம்: 69.46%. கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஏப்ரல் 19, 2024 அன்று (வாக்களிப்பு ...

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி திருநெல்வேலி விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், தாம்பரம் காவல் துறையினர் இணைந்து சோதனை நடத்தினர். அப்போது ரயிலில் ...

கொடைக்கானல்: தமிழக முதல்வர் ஸ்டாலின் மாலத்தீவுக்கு சென்று குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதாக தகவல் வெளியான நிலையில், அதனை திமுக மறுத்துள்ளது. அதேநேரம் ஸ்டாலின் கொடைக்கானல் வர உள்ளார். ஏப்ரல் 29ம் தேதி இங்கு வரும் நிலையில், அவர் குடும்பத்துடன் மே 4 வரை தங்கி ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ...

மணல் குவாரி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி திருச்சி தஞ்சாவூர் கரூர் அரியலூர் பேரூராட்சி ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர் அவர்களிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது அவர்கள் அளித்த பதில்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் ...

வனபத்ரகாளியம்மன் கோவிலில் தட்டு காணிக்கைகளை கையாடல் செய்த விவகாரம் – நான்கு பூசாரிகள் அதிரடியாக கைது. பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் தலைமறைவு. கோவை, மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலின் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் புகார் மனு ஒன்றினை அளித்து ...