பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று பிற்பகலில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் ...
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாநகர பேருந்து இயக்கத்தை துவக்கி வைத்தார் தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர். திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளித துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதிய மாநகரப் பேருந்து சேவையை துவக்கி வைத்தார். திருவெறும்பூர் அருகே உள்ள குத்தைப் பார் பேரூராட்சி பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று ...
பா.ஜ.க. ஆதரவுடன் 9-வது முறையாக பீகார் மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் நிதிஷ் குமார்.அவருக்கு கவர்னர் ராஜேந்திர அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் பா.ஜ.க.வை சேர்ந்த 2 பேர் துணை முதல்வர்களாகவும், 8 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டார். பீகாரில் மொத்தமுள்ள 243 இடங்களில் ஆர்ஜேடி 79 தொகுதிகளிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும் ...
வலுவான நீதித்துறையே வளர்ந்த இந்தியாவின் அடித்தளம்’ என உச்சநீதிமன்ற வைர விழாவில் பிரதமர் மோடி பேசினார். இந்திய உச்சநீதிமன்றம் கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 28ல் நிறுவப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் 75வது நிறுவன தினத்தை முன்னிட்டு அதன் வைர விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ...
பெங்களூருவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றவுள்ளது. கர்நாடக மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் கலந்து கொள்ளவதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் ராஜீவ் ஏற்கனவே ...
சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது:- போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரோப்வே எனப்படும் தேசிய கயிறு பாதை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்றும் கட்காரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய ...
பெண் பத்திரிகையாளர் தொடர்ந்து அவதூறு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ரூ. 680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் தன்னை அவமானப்படுத்தியதாக பெண் பத்திரிக்கையாளர் ஜீன் கரோல் என்பவர் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 10 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோரி ட்ரம்ப் மீது ...
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் 96 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மொத்த வாக்காளர்களில் 1.73 கோடிக்கும் மேற்பட்டோர் இளையோர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2024-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கபட்ட நிலையில், இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு ...
சேலம்: மன்னராட்சியைக் கொண்டுவர திமுக முயற்சிக்கிறது. ஜனநாயகநாட்டில் ஒரே குடும்பத்தினர் ஆட்சிக்கு வருவது ஏற்புடையதல்ல, அது சர்வாதிகாரம் ஆகிவிடும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலத்தை அடுத்த மல்லமூப்பம்பட்டியில் நேற்று நடைபெற்றது. திமுக, பாமக, கொமதேக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 700-க்கும் மேற்பட்டோர், கட்சியின் ...
சென்னை: மகாத்மா காந்தியின் விடுதலைப் போராட்ட பங்களிப்பை கொச்சைப்படுத்துகிற வகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து கூறியிருப்பதை வன்மையாக கண்டிப்பதாக கூறியிருந்த தமிழக காங்கிரஸ், இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இது தொடர்பாக நேற்று முன்தினம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “இந்திய ...













