திருச்சியைச் சேர்ந்தவர் முன்னாள் எம்.பி அடைக்கலராஜ். காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு அவர் 4 முறை வெற்றிபெற்று எம்.பி ஆனார். கடந்த 1984ம் ஆண்டு முதன்முதலாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் அவர். 1984, 1989 மற்றும் 1991ம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். அடுத்ததாக 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் ...

தமிழ் சினிமாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த நடிகராக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த ஆளுமையாக திகழ்ந்துவரும் ஒரு மாபெரும் நடிகர் தான் தளபதி விஜய். தற்பொழுது பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் அவர் அடுத்தபடியாக ...

திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில், மாநகராட்சிப் பகுதிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், வரும் 12ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை 10 மணியளவில், மாபெரும் மனித சங்கிலிப் போராட்டங்கள் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு ஆட்சிக்கு வந்த ...

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. கட்சிகளுக்குள் கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதிகள் பங்கு பிரிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக மத்தியில் ஆளும் பாஜக, கடந்த மார்ச் 2-ஆம் தேதி 195 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் தனது முதல் கட்ட வேட்பாளர் ...

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் மகளிர் தின விழா மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கும் நிகழ்ச்சி திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம், காங்கிரஸ் கட்சிக்கு திருச்சி தொகுதி உறுதியாகி இருக்கிறதா என்கிற கேள்விக்கு?, தற்போது வரை தொடர்ந்து ...

திருச்சி ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசிய மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாா், தேர்தல் செலவினங்களாக தேர்தல் ஆணையம் நிா்ணயித்துள்ள கட்டண விவரங்களை தெரிவித்து அதன்படி பணியாற்ற அறிவுறுத்தினாா். மேலும், மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் ...

கேரள அரசு பொதுச் சந்தையில் ரூ.13,608 கோடி கடன் பெற மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. மேலும், இந்த மனுவை திரும்பப் பெற்றால்தான் கடன் பெற கேரளத்துக்கு அனுமதிக்கப்படும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அரசு ஊழியா்களுக்கும் ஊதியம், ஓய்வூதியம் வழங்கவே நிதியில்லாமல் தவித்து ...

30 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும், உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு புதிய சட்டம் உள்ளிட்ட 5 அம்ச வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்காக தயாராகி வருகின்றன. ஆளும் பாஜக அரசை வீழ்த்துவதற்காக நாடு முழுவதும் இந்தியா கூட்டணியை ...

பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகத்துள்ளன என உச்சநீதிமன்றம் பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது .தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்கள் பத்திரங்களை மார்ச் 6ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது தற்பொழுதும் வரை அதற்கான காலக்கெடுவை நீடிக்க வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ...

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரசும் மதிமுகவினரும் போட்டி போட்டு கொண்டிருக்கும் வேளையில் இதுவரை அமைதியாக இருந்த திமுகவும் களத்தில் குதித்துள்ளதால் யாருக்கு இந்த தொகுதி என்பதில் ‘சஸ்பென்ஸ்’ ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் திருச்சி மக்களவைத் தொகுதியை தங்களுக்கு மீண்டும் ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியும், இந்த முறை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ...