திருச்சியில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.!!

பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகத்துள்ளன என உச்சநீதிமன்றம் பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது .தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்கள் பத்திரங்களை மார்ச் 6ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது தற்பொழுதும் வரை அதற்கான காலக்கெடுவை நீடிக்க வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியை தன் கைப்பாவையாக பயன்படுத்தி இதுவரை செய்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை மறைக்க முயற்சி செய்யும் பாஜக அரசு கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டம் திருச்சியில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகம் முன்பு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது . இதில் காங்கிரசின் துணை அமைப்புகளான சேவாதாரம் இளைஞர் காங்கிரஸ் மகிலா காங்கிரஸ் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சத்ததன் சிறுபான்மை பிரிவு பட்டதாரி அணி எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவு ஓபிசி பிரிவு முன்னாள் ராணுவ வீரர் பிரிவு மருத்துவர் பிரிவு விவசாய பிரிவு பொறியாளர் பிரிவு வக்கீல் பிரிவு கலைப்பிரிவு மீனவர் பிரிவு இலக்கிய அணி ஐ என் டி எஸ் இ அமைப்புசாரா தொழிலாளர்கள் மாணவர்கள் பிரிவு மனித உரிமை பிரிவு தலைவர்கள் மற்றும் கூட்டத் தலைவர்கள் வார்டு தலைவர்கள் நிர்வாகிகள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். இதனை அடுத்து பாரத வங்கியின் தலைமை அலுவலகம் முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.