ரஷிய-உக்ரைன் போரால் மிகவும் கவலை அடைந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் விரைவில் தீா்வு காண வேண்டும் எனவும் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஜெலென்ஸ்கியிடம் பிரதமா் மோடி வலியுறுத்தியதாக இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா். அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமா் மோடி தனது பயணத்தை நிறைவு செய்யும் முன்பாக உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கியை சந்தித்து ஆலோசனை ...
தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், தனது 69 வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை எச் வினோத் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் மோகன்லால், பிரகாஷ்ராஜ், நடிகைகள் சிம்ரன், சமந்தா, பூஜா ஹெக்டே மற்றும் மமீதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. ...
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் துணை அதிபர் கமலா ஹாரிஸின் பிரச்சார அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் டிசம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும் மோதிக் கொள்கின்றனர். இதனால் நாடு முழுவதும் பிரச்சாரம் ...
பாராலிம்பிக் போட்டி… பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.5 கோடி ஊக்கத் தொகை – முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.!!
சென்னை: பாராலிம்பிக்கில் வெள்ளி, வெண்கல பதக்கங்கள் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தலைமைச் செயலகத்தில் இன்று (செப்.25) நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5 கோடிக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்தியதுடன், நெசவாளர்களுக்கான விருதுகளையும் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.25) காலை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் ...
நீலகிரி மாவட்டம், உதகை சேரிங்கிராஸ் தோட்டக்கலை வளாகத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கடன் வழிகாட்டுதல் முகாமினை தொடங்கி வைத்து, 47 பயனாளிகளுக்கு ரூ.3.65 கோடி மதிப்பில் பல்வேறு கடன் உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ...
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் வரையிலான வட்ட பேருந்து சேவையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று கொடிஅசைத்து துவக்கி வைத்தார். இந்த பேருந்து சத்திரம் பேருந்து நிலையம், இபி ரோடு, காந்தி மார்க்கெட், பாலக்கரை, மத்திய பேருந்து நிலையம், , மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், அரசு மருத்துவமனை, ...
இலங்கையில் நேற்று முன் தினம் அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை அதன் பிறகு இலங்கையின் புதிய அதிபராக அனுரகுமார திசாநாயக்க தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற அனுர குமார திசநாயக்க தற்போது புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இவர் இலங்கையின் 9-வது அதிபர் ஆவார். இவருக்கு இலங்கை ...
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகியோர் இன்று திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரூபாய் 5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய மருத்துவக் கட்டிடங்களை திறந்து வைத்து பல்வேறு துறைகளின் சார்பில் 163 பயனாளிகளுக்கு ரூபாய் 1.48 ...
புதுடில்லி:இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் உச்சிமாநாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இன்று (செப்டம்பர் 21) அதிகாலை அமெரிக்கா சென்றார். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து உலக நிலவரங்கள் குறித்து விரிவாக ...
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. மக்கள் நீதி மய்யம் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. திமுகவுடன் செய்து கொண்ட கூட்டணி ஒப்பந்தப் படி ...













