இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக்க பதவியேற்பு..!!

இலங்கையில் நேற்று முன் தினம் அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை அதன் பிறகு இலங்கையின் புதிய அதிபராக அனுரகுமார திசாநாயக்க தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற அனுர குமார திசநாயக்க தற்போது புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இவர் இலங்கையின் 9-வது அதிபர் ஆவார். இவருக்கு இலங்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயந்த் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். மேலும் இவர் இலங்கையின் களனி பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்த நிலையில் மாணவராக இருக்கும் போது அரசியலில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.