மதுரை: மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்கும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரும் 15-ம் தேதி நடக்கிறது. இந்தப் போட்டியை நடத்துவதில் மாவட்ட நிர்வாகத்துக்கும், ஜல்லிக்கட்டுக் குழு நிர்வாகிகளுக்கும் இடையே ...

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் நாகேந்திர ராமச்சந்திர நாயக்கை நியமிக்கும் முடிவை மூன்றாவது முறையாக செவ்வாய்க்கிழமை மீண்டும் வலியுறுத்தியது. மேலும், ஐந்து உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளாக நியமிக்க 9 பெயர்களையும் பரிந்துரைத்தது. சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் 10 ஜனவரி 2023 அன்று ...

ஒற்றைக் கருப்பன் யானையை பிடிக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி ஜீரகள்ளி ஆகிய வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ஒற்றை கருப்பன் யானை தினந்தோறும் வனத்தை ஒட்டியுள்ள கிராமத்துக்குள் புகுந்து வாழை, மக்காச்சோளம், கரும்பு ஆகிய விளைபயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதையடுத்து விவசாயிகள் ...

350 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கம் பிருத்வி -2 என்ற ஏவுகணையை இந்தியா வெற்றி கரமாக சோதனை நடத்தி உள்ளதை அடுத்து இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஒடிஷா கடற்கரை பகுதியில் உள்ள சந்திப்பூர் என்ற இடத்தில் இந்த சோதனையை நடத்தப்பட்டதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் அணுசக்தி ...

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். அதாவது ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம்,ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் மற்றும் ஜனவரி 30ஆம் தேதி வள்ளலார் நினைவு ...

துணிவு, ‘வாரிசு படங்கள் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படமும், நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படமும் கடந்த 11-ம் தேதி வெளியானது. இதனிடையே, வரும் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் திரையரங்குகளில் துணிவு, வாரிசு படங்களுக்கு ...

தமிழ்நாட்டில் 21 காவல்துறை உயரதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக சைலேஷ் குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில குற்றப்பதிவுப் பணியக காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேயா குப்தா நியமனம் ...

புதுடெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்கள் 10 நாடுகளில் இருந்து யுபிஐ மூலம் பணம் அனுப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய பணப்பறிமாற்ற நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்குள்ள சர்வதேச மொபைல் எண் வழியாக யுபிஐயில் பதிவு செய்து பணம் அனுப்ப அனுமதி அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்டு சிங்கப்பூர், ...

புதுடெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அவர் பேசியதாவது: வளரும் நாடு என்ற ...

கோவை அருகே உள்ள பொங்காளியூர், பாலகணேசபுரத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ் ( வயது 57 ) கூலி தொழிலாளி. இவர் நேற்று வடவள்ளி- லிங்கனூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பழனியப்பா நகர் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு பைக்கும், இவரது பைக்கும் மோதிக் கொண்டன. இதில் ரங்கராஜ் தலையில் ...