கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் மே பத்தாம் தேதி நடைபெறுகிறது இந்த தேர்தலில் காங்கிரஸ்,பாஜக இடையே கடுமையான போட்டி உருவாகியுள்ளளது. பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தது. இந்த நிலையில் தனித்து போட்டியிடுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் ...

ஆளுநர் பதவியில் எப்பொழுது சலிப்பு ஏற்படுகிறதோ, அப்பொழுது பதவி விலகி விடுவேன் என ஆளுநர் ரவி பேச்சு..!! தமிழக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் மாவட்டம் சென்றடைந்துள்ளார். அங்கே மண்டபம் பகுதியில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களுடன் கலந்து ஆடினார். அப்பொழுது பேசிய அவர் மாணவர்கள் செல்போன்களில் நேரத்தை ...

நிங்கலூ கிரகணம் (Ningaloo Eclipse) என்று அழைக்கப்படும் ஹைபிரிட் சூரிய கிரகணம் (ஏப்ரல் 20) நாளை நிகழ உள்ளது. இது ஒரு அரிய கிரகண நிகழ்வு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நிங்கலூ கிரகணம் ஹைபிரிட் சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் உலகின் சில பகுதிகளில் இது வளைய கிரகணமாக தோன்றும் முன், முழு கிரகணமாக ...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டமாக “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்கிற முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி வரும் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை 8 நாட்கள் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் 325-க்கும் மேற்பட்ட புகைப்படங்களுடன் ஏறத்தாழ 12 ...

21-22ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், கரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு நடமாடும் கண் சிகிச்சை வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாவட்ட நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு சேலம், திருவள்ளூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஏற்கனவே நிறுவப்பட்டதன் தொடர்ச்சியாக, கரூர், நாகப்பட்டினம், ...

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தாதா அரசியல்வாதி அத்தீக்கின் மனைவி சாயிஸ்தா பர்வீன், அத்தீக்கின் சகாவான குட்டு முஸ்லிம் தலைமறைவு தொடர்கிறது. இருவரையும் கைது செய்வது உபி காவல்துறைக்கு பெரும் சவாலாகி விட்டது. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ராஜுபால் வழக்கின் முக்கிய சாட்சி உமேஷ்பால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் 10 குற்றவாளிகளில் அத்தீக், ...

கோவை: கோவையில் சேதமடைந்து காணப்படும் மூன்று மார்க்கெட் வளாகங்களை ரூ.8.07 கோடி மதிப்பில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தெரிவித்தார். கோவை மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்துநிலையத்துக்கு எதிரே, எம்.ஜி.ஆர் மொத்த காய்கனி மார்க்கெட் உள்ளது. இங்கு 120-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா மாநிலத்துக்கும் தினமும் காய்கறிகள் ...

சங்கராபுரம் : துபாயில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்கள் உடல்கள் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டன. அமைச்சர் மஸ்தான் அஞ்சலி செலுத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த ராமராஜாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முகமது ரபிக், 49; இமாம் காசிம், 43; துபாயில் வேலை செய்தனர்.இந்நிலையில், கடந்த 15ம் தேதி, அவர்கள் தங்கியிருந்த அடுக்கு மாடி ...

மதுரை: தமிழகத்தில் வரும் 20-ம் தேதி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம், போராட்டத்தில் ஈடுபடுவதால் அன்றைய நாளில் பல ஆயிரம் கோடி உற்பத்தி, வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகளவு சிறு, குறு தொழில் நிறுனங்கள் அமையப்பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 50 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர ...

சென்னை: சென்னை மெரினா லூப் சாலையில் மீனவர்கள் தொடர்ந்து 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சூழலில் நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி ஆணையர் கக்கன் தீப்சிங் பேடி ஆகியோருடன் மீனவ பிரதிநிதிகள் பேச்சு வார்த்தை நடத்திய பின்பு, ஒரு வழி பாதையாக வாகனங்கள் செல்ல மீனவர்கள் அனுமதி அளித்துள்ளனர். உயர் நீதிமன்ற தீர்ப்பு ...