தூத்துக்குடி புதிய பஸ்நிலைய நுழைவுவாயிலை ஒட்டியுள்ள ஸ்ரீ போத்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நடைபெற்ற பூஜைகளில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன், ராஜா, அசோக் மற்றும் திமுக மாநகர செயலாளர் எஸ்.ஆர். ஆனந்தசேகரன் மாநகராட்சி கவுன்சிலர் கீதாமுருகேசன், சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ...
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் உலக ஓசோன் தினத்தினை முன்னிட்டு ஓசோனை பாதுகாப்போம் என்கிற தலைப்பில் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஓசோனை பாதுகாப்பது தொடர்பான பல்வேறு தகவல்கள் மாணவர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது. ஓசோன் பாதுகாப்பு தொடர்பான ஓவியப் போட்டி பள்ளி ...
84 தரைப்படை வீரர்கள் மற்றும் 20 கப்பற்படை வீரர்கள் உட்பட 104 இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கோவை ஈஷா யோக மையத்தில் 15 நாள் ஹத யோகா பயிற்றுநர் பயிற்சியை (செப்.15) வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இந்திய ராணுவத்தின் தெற்கு பிராந்திய படைப் பிரிவும், ஈஷா யோக மையமும் இணைந்து நடத்தும் ராணுவ வீரர்களுக்கான ...
சத்தியமங்கலம் : சமூகநீதி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகம் முன்பு நடைபெற்றது. பெரியாரின் அலங்கரிக்கப்பட்ட திருஉருவப்படத்திற்கு சமூக நீதி பாதுகாப்பு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். விசிக பவானிசாகர் தொகுதி செயலாளர் பொன்.தம்பிராஜன் முன்னிலை வகித்தார். இந்த ...
சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் மாங்கல் மொக்கை செல்வகணபதி நகரில் அமைந்துள்ள மகா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு கணபதி ஹோமம் முதல் கால பூஜை, கலச பூஜைகள், திரவ்ய யாகம், பூர்ணாகுதி, தீபாராதனை மற்றும் சுவாமி ...
சத்தியமங்கலம் : தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்காக தமிழக அரசின் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை மூலம் 1591 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதில் ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்காக 425 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய ...
கோவை;விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கோவை மாவட்டம் முழுவதும், 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.விநாயகர் சதுர்த்தி விழா, இன்று கொண்டாடப்பட உள்ளது. சிலை ஊர்வலம் மற்றும் பொது இடங்களில் சிலை வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார், கோவை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு ...
அனைவருக்கும் நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்… விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகப் பெருமானின் பிறந்த நாளாக வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. முழு முதற் கடவுளை விநாயகர், கணபதி, ஆனைமுகன், பிள்ளையார் என பல பெயர்களால் அழைக்கிறோம். . விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 18 மற்றும் செப்டம்பர் 19 ஆகிய ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அமாவாசை தினம் என்பதால் காலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் வருகை ...
சனாதனம் அடிப்படையாக அற உணர்வை போதிப்பதே தவிர பாகுபாடுகளையோ, வேறுபாடுகளையோ உணர்த்த கூடியது அல்ல. என்பதை உணர்ந்து வேற்றுமையில் ஒற்றுமை காணுகிற பாரதத்தில் வேண்டாத விஷயங்களை விதைப்பது ஏற்க தகுந்தது அல்ல என வேளாக்குறிச்சி ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகா தேவ தேசிக பரமாச்சரிய சுவாமிகள் கருத்து தெரிவித்து உள்ளார். தஞ்சை மாவட்டம் பருத்திக்கோட்டையில் ...