திருப்பூர்: வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்ட நிலையில், தமிழக அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக, திருப்பூரில் ஆய்வு செய்த பிஹார் மாநில அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர். தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்கள் வெளியாகின. பல்வேறு வதந்திகளும் பரவின. இதன் காரணமாக, இங்குபணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது. ...

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு மலர் அலங்காரங்கள், கண்காட்சிகள் இடம்பெறுவது வழக்கம். சீசனுக்காக ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் செடிகள் நன்றாக செழித்து வளர்வதற்காக கவாத்து செய்யப்பட்டன. அங்கு 4,201 ரகங்களை சேர்ந்த 31,500 வீரிய ரக ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு ...

பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியில் உள்ள உச்சி மாகாளியம்மன் கோயில் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு வருடமும் இங்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கியது இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று ...

பெங்களூரு: இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும்பாலானவர்கள் சர்வ காலமும் ஸ்மார்ட்போன், கணினி என ஏதேனும் ஒரு டிஜிட்டல் சாதனத்தில் நேரத்தை செலவிடுகிறோம். அதே நேரத்தில் தினசரி வழக்கமாக மேற்கொண்டு வரும் பணிகள் ஒருகட்டத்தில் விரக்தியை கொடுக்கும். அந்த வகையிலான விரக்தியை விரட்டி அடிக்க பெங்களூரு நகரில் ரேஜ் (Rage) ரூம் கான்செப்ட் அறிமுகமாகியுள்ளது. இந்த அறையில் விரக்தியில் ...

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக தேர்த்திருவிழாவானது வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இரவு அன்னவாகன உற்சவம் நடந்தது . இன்று முதல் ...

இந்தியாவுக்கு வருகை தந்த ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் டெல்லியில் சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய சம்பவம் கவனமீர்த்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இரண்டு நாள்கள் சுற்றுப் பயணமாக ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் நேற்று முன்தினம்  (பிப்.25) டெல்லி வந்தார். இந்தியா – ஜெர்மனி இடையேயான இருதரப்பு உறவுகளை ...

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி கோவில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் மாசி மகதிருத்தேர் திருவிழாவானது வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவாலின் காரணமாக பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த ஆண்டு மாசிமக திருத்தேர் ...

சென்னை:’ ஜெயலலிதா போல, இன்னொரு பெண்மணியை யாரும் பார்க்க முடியாது’ என, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 75வது பிறந்த நாளை முன்னிட்டு, நடிகர் ரஜினி பேசிய ‘வீடியோ’ பதிவு வெளியாகியுள்ளது.அதில் அவர் கூறியுள்ளதாவது:ஜெயலலிதாவின், 75வது பிறந்த நாளில், அவர் நம்மிடையே இல்லை என்ற வருத்தத்தோடு, அவரை நினைவுப்படுத்தி கொள்கிறேன். ஜெயலலிதா போல ...

கோவை கெம்பட்டி காலனி தர்மராஜா கோவில் வீதியில் தர்மராஜா திரவுபதியம்மன், ஸ்ரீகுண்டத்து பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 60 அடி நீளத்தில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி 327-ம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 10-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் தர்மராஜா திரவுபதியம்மன், ஸ்ரீகுண்டத்து பத்திரகாளியம்மனுக்கு அபிரேஷக ...

மகாசிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு நடத்தப்படும் நான்கு கால பூஜைகள் சிறப்பு வாய்ந்தவை. எந்தெந்த கால பூஜையில் எந்த பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் தெரியுமா? சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் சிவராத்திரி ஒன்று என்றால் சிவபெருமானின் பூரண ஆசியை பெற மகாசிவராத்திரி அனைத்திலும் முக்கியமான ஒன்று. தமிழ் மாதமான மாசி மாதத்தின் கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் அமாவாசைக்கு ...