கோவை அரசு மருத்துவமனையில் முதலாமாண்டு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் சார்பில் ஊட்டச்சத்து விழா நடைபெற்றது. இதில் சிறுதானியங்கள், காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து உணவுகளை காட்சிக்கு வைத்திருந்தனர். சர்க்கரை பாதிப்பு, ரத்த அழுத்தம், ரத்தசோகை, எலும்புப்புரை போன்ற நோய் பாதிப்புக்கு உள்ளாகியவர்கள் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகள் குறித்த நோயாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ...

இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்க வீதிதோறும் நூலகம் திட்டம் அறிமுகம்: போலீஸ் கமிஷனர் தகவல் இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்கவும், குழந்தைகளை மாலை நேரங்களில் ஆக்கப் பூர்வமான செயல்களில் ஈடுபடுத்தவும் கோவையில் வீதிதோறும் நூல்கம் என்ற திட்டத்தை முன்னெடுத்து உள்ளோம். முக்கியமாக குடிசைப் பகுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் எல்லாம் ஒவ்வொரு தெருவிலும் ஒரு நூலகம் என்ற ...

சென்னை: கடந்த 5 மாதங்களில் ரயில் பயணிகளிடம் திருடப்பட்ட ரூ.1.30 கோடி மதிப்பிலான பொருட்களை ரயில்வே போலீஸார் மீட்டனர். அவற்றை டிஜிபி சைலேந்திரபாபு உரிமையாளர்களிடம் நேற்று ஒப்படைத்தார். தமிழகம் முழுவதும் ரயில் பயணிகளிடம் திருடப்பட்ட நகைகள், செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு சென்னை பெரம்பூர் ரயில்வே திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. திருச்சி, சென்னை ரயில்வே ...

ஊட்டி: நீலகிரியில் 2-வது சீசன் தொடங்கியது முதல் இங்கு இதமான காலநிலை நிலவுகிறது. இதை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாது கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நீலகிரியில் குவிந்தனா். இவா்கள், ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தனர். ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் வெள்ளியங்காடு மற்றும் பெல்லாதி குளங்களில் மீன் பிடித்து தொழில் செய்து வருகின்றனர். இதனிடையே ஒரு தரப்பினர் பெல்லாதி குளத்தில் மற்றொரு தரப்பினரை மீன்பிடிக்க விடாமல் தடுப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது பத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு வலையை ...

கோவை : கோவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியலமைப்பினர், விவசாயிகள், பொதுமக்கள் என தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகராட்சியின் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பயிற்சி வகுப்பு நடத்தியுள்ளது. அரசு ...

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக ஆளுநருக்கு திருக்குறள் புத்தகம் அனுப்பும் போராட்டம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி. நாடு வளர்ச்சி அடைய பொருளாதார ரீதியில் மட்டும் இல்லாமல் ஆன்மிக ரீதியாகவும் வளர்ச்சி அடைய வேண்டும். திருக்குறள் ஆன்மிகம் மற்றும் ...

கோவையில் யுவன் சங்கர் ராஜா இசைக் கச்சேரியில் கூட்ட நெரிசலில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து 10 பேர் காயம் கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசை நிகழ்ச்சியை காண வந்தவர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இந்த ...

கோவை எட்டிமடையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்துகொண்டு பேசியதாவது: பிரதமர் மோடியின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நாட்டில் இருந்த பல்வேறு பிரச்னைகள் சரி செய்யப்பட்டுள்ளதால் நாடு பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சி அடைந்து வருகிறது. மொழி, இடம், கலாசாரம் ...

புரட்டாசி மாதம் என்றாலே அது பெருமாள் மாதம் என்பது பக்தர்களின் கருத்து. அதுவும் திருமலை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருமலையில் புரட்டாசி நவராத்திரியை ஒட்டி பிரம்மோற்சவமும் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள். இதை ஒட்டிக் கடந்த வாரம் திருமலையில் ஒரு நாளைக்கு 80 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ...