புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரினால் கோதுமையின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. போர் காரணமாக கடந்த சில மாதங்களாக அங்கிருந்து கோதுமை ...

சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்களைத் தொடர்ந்து, ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்றசுதந்திர தின விழாவில் பேசியமுதல்வர் மு.க.ஸ்டாலின், ”அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து, 34 சதவீதமாக உயர்த்திவழங்கப்படும்” என்று அறிவித்தார். இதையடுத்து, தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி ...

கூகுள்-பே மற்றும் போன்-பே உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்டிருந்தது. மக்களின் அன்றாட பயன்பாட்டில் ஒன்றாக மாறியுள்ள டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் என்ற செய்தியானது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் ஏதும் ...

டெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இன்று மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்க இருக்கும் நிலையில், ஜந்தர் மந்தர் பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ...

கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சரக்குகள் புக்கிங் செய்யப்பட்டு பார்சல்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. கோவையில் இருந்து முன்பு ஷார்ஜா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய 3 வெளிநாடுகளுக்கு விமான சேவை இருந்தது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து, இலங்கைக்கான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2 ...

காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு கோவை காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் ஆகஸ்ட் 23, 24 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கோவை மாவட்ட தேர்வு மையத்தின் துணைக் குழுத் தலைவர் வெளியிட்ட அறிக்கை: காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல் ...

சென்னை: சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி ஏமாற்றுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில்கூட ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள், ஊழியர்கள், பிரபலங்கள், தொழில் அதிபர்கள், பணியாளர்கள் பெயரில் சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படத்துடன் முகநூல் (ஃபேஸ்புக்) கணக்கை கும்பல் ஒன்று தொடங்கியது. இதேபோல், வாட்ஸ்-அப்பிலும் அதிகாரிகளின் புகைப்படத்தை டி.பி.யாக வைத்து பணம் பறிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன. இந்த ...

திருப்பூர் : கோவை, திருப்பூர் உட்பட, தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் முத்திரை தாள் தட்டுப்பாடு நிலவுகிறது; தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.தமிழகத்தில் பதிவு துறையின் கீழ், 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன. பதிவுத்துறை அலுவலகத்தில் சொத்து கிரயம் செய்வதற்கு, 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் ஆகிய மதிப்புள்ள ...

இரு மடங்கு பணம் தருவதாக கூறி சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் மோசடி கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒடையகுளம் ஓ.எஸ்.பி. நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்( 40). தொழில் அதிபரான இவர் ஒடையகுளத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரனுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. ...

உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி உலக உடல் உறுப்பு தானம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, யங் இந்தியா, சிஐஐ ஆகியவை சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி ...