தமிழ்நாட்டில் 21 காவல்துறை உயரதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக சைலேஷ் குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில குற்றப்பதிவுப் பணியக காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேயா குப்தா நியமனம் ...

இந்தியாவின் மொத்த நேரடி வரி வசூல் நடப்பு நிதியாண்டில் ஜனவரி 10 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 24.58 சதவீதம் வரையில் உயர்ந்து 14.71 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. இந்திய அரசின் நேரடி வரி வசூலில் ஏற்பட்ட தடாலடி உயர்வுக்கு மிகவும் முக்கியமான காரணமாகத் தனிநபர் வருமான வரி அதிகரிப்பு பெரும் பங்கு வகித்துள்ளது ...

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சோலார் மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். திருவாரூரில் சோலார் பூங்கா உள்பட அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் சோலார் திட்டம் கொண்டு வரப்படும் என தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். வழக்கமான மின்சாரத்திற்கு மாற்றாக, மின் உற்பத்தி செய்வதில் ஒட்டுமொத்த நாட்டிற்கே ...

உலக அளவில் நேரம் தவறாமல் விமானங்களை இயக்கும் முதல் 20 விமான நிலைய பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கோவை விமான நிலையம், 13வது இடத்தை பிடித்துள்ளது. உலக பயண தகவல்களை வெளியிடும் ஓஏஜி நிறுவனம் உலக அளவில் நேரம் தவறாமல் விமானங்களை இயக்கும் முதல் 20 விமான நிலைய பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில், கோவை ...

சென்னை: தமிழ்நாட்டில் சென்னையை தொடர்ந்து மேலும் 6 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சேலம், மதுரை, திருச்சி, கோவை, ஓசூர், வேலூர் நகரங்களில் இன்று முதல் மக்கள் விரைவான 5ஜி சேவையை பெற முடியும். இந்த புதிய 5ஜி சேவையை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று துவக்கி ...

சென்னை:”இந்தியா — ஆஸ்திரேலியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக, ஐந்து ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்; கூடுதலாக, 81 ஆயிரத்து, 710 கோடி ரூபாய் ஏற்றுமதி வாய்ப்பும் கிடைக்கும்,” என, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணை செயலர் பாலாஜி தெரிவித்தார். இந்தியா — ஆஸ்திரேலியா பொருளாதார கூட்டுறவு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ...

கோவை: பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டப்படுகிறது. பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊர்களுக்கு கொண்டாடுவதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை,தேனி மற்றும் தென் ...

கோவை – திண்டுக்கல் பொங்கல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்டம் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ரெயில் பயணிகள் சங்கங்கள், ரெயில் பயணிகள், ஆலோசனை குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று வருகின்ற 13-ந் முதல் 18-ந் வரை கோவை – திண்டுக்கல், திண்டுக்கல்-கோவை வழியாக ...

கோவை: ராமேசுவரம் பாம்பன் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கோவை – ராமேசுவரம் வாராந்திர ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டம் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவையில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் இரவு 7.45 மணிக்குப் புறப்படும் கோவை – ராமேசுவரம் வாராந்திர ...

உத்தரப் பிரதேச அரசு சார்பாக சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த இரு தினங்களாக நடைபெற்றது. இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (ஃபிக்கி) உதவியுடன் உ.பி. அரசு இந்த மாநாட்டை நடத்தியுள்ளது. இம்மாநாட்டில் 500 தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டனர். ரூ.10,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுவாக, ஒரு மாநிலத்தில் பெரிய அளவில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும்போது, ...