சிவகங்கை மாவட்டம்,காரைக்குடி பக்கம் உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் ( வயது 33) தள்ளுவண்டி பெல்ட் வியாபாரி. இவர் நேற்று சிங்காநல்லூர்,ஹவுசிங் போர்டு காலனி, திருநகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது இவரிடம் ஒரு கும்பல் தங்களிடம் விபசாரத்துக்கு அழகிகள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறினார்கள். இது குறித்து முருகேசன் சிங்கநல்லூர் ...
கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம், ஜி.சி.டி .நகரை சேர்ந்தவர் விவேக். இவரது மனைவி சந்தியா (வயது 34) இவரது வீட்டில் இடையர்பாளையம், தடாகம் ரோடு, டி.வி.எஸ். நகரை சேர்ந்த குமரகுரு மனைவி ராஜேஸ்வரி ( வயது 38 )என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்தார் .கடந்த 29ஆம் தேதி ...
கோவை போத்தனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் நேற்று வெள்ளலூர் புற்றுகண் பாலம்பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 30 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் (குட்கா ) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இதை விற்பனை செய்து வந்த வெள்ளலூர் ரமேஷ் ...
கோவை , வடவள்ளி மகாராணி அவென்யூவை சேர்ந்தவர் பிரனேஷ் ( வயது 38) ஸ்பின்னிங் எந்திரம் சர்வீஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் வடவள்ளி சிறுவாணி ரோட்டை சேர்ந்த துரைராஜ் மனைவி லட்சுமி ( வயது 44) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். இவர் தனது மகன் திருமணத்திற்காக ஒரு மாத ...
திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகில் என்ஐடி தேசிய தொழில்நுட்பக் கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது . இளநிலை மற்றும் முதுநிலை தொழில்நுட்ப படிப்பில் பல மாநிலங்களில் இருந்து நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர். நேற்று முன்தினம் காலை கல்லுாரி மாணவியர் விடுதியில் வைபை சேவை குறைபாடு ஏற்பட்டது. இதை சரிசெய்ய, என்.ஐ.டி.,யின் தற்காலிக ஊழியரான ராமநாதபுரம் ...
திருவனந்தபுரம்: நடிகை அளித்த பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது 2-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் ஜெயசூர்யா மீது திருவனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே நடிகர் ஜெயசூர்யா மீது நேற்று பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிவால் நடிகர் ஜெயசூர்யாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ...
கோவை மாவட்டம் , அன்னூர் பக்கம் உள்ள ஒட்டர் பாளையத்தில் அருள்மிகு பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மைதானத்தில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக அன்னூர் போலீசுக்கு தகவல் வந்தது . சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது பணம் வைத்து சீட்டு ...
கோவைபுதூர் அருகே உள்ள குளத்துப்பாளையம்,விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் இயேசுராஜ் .இவரது மகன் மண்ணீஸ்வரன் ( வயது 24) காந்திபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று குளத்துப்பாளையம் விநாயகர் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போ அங்கு வந்த 2 ஆசாமிகள் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர். ...
கோவை சின்ன வேடம்பட்டி பக்கம் உள்ள சின்ன மேட்டுப்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் கலியபெருமாள் ( வயது 63) அங்குள்ள இன்ஜினியரிங் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் .நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்து கிடந்தது. ...
கோவை திருச்சி ரோடு, நாடார் காலனியை சேர்ந்தவர் கஜனத்விர் (வயது 28) இவர் நாடார் காலணியில் உள்ள ஸ்டூடியோவில் கடந்த 6 ஆண்டு மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 23ஆம் தேதி ஸ்டுடியோவில் மின் கசிவு காரணமாக திடீரென்று தீப்பிடித்தது . இது குறித்து தீயணைப்பு படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ...












