2025-26-ஆம் நிதியாண்டில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.38,424 கோடிக்கு பாதுகாப்புத் துறை சாா்ந்த ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. அமெரிக்கா, ரஷியா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை முன்பு இந்தியா இறக்குமதி செய்து வந்தது. அந்த நிலை அண்மைக்காலமாக மாறி வருகிறது. இந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே ஆயுதங்களைத் தயாரித்து, அதை நட்பு ...

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவின்படி, தமிழ்நாட்டின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் இன்று  முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தில் முழுமையான நடுநிலைமையைப் பேணும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த மாற்றத்தைச் செய்துள்ளது. ஏற்கனவே ...

ஈரான் – இஸ்ரேல் போரின் தாக்கம் அனைத்துத் துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக விமானப் போக்குவரத்தை நிறுத்தியதால் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக, நாடு முழுவதும் LPG வாங்க மக்கள் நீண்ட வரிசைகளில் நின்றனர். இந்த நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் எரிவாயு சிலிண்டர்களின் விலையையும் ...

ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றத்தை தணித்து, கடல்சார் பாதுகாப்பை மீட்டெடுக்க பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையில் 35 நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. இதற்காக லண்டனில் சர்வதேச அளவிலான தூதரக மாநாடு நடைபெறவுள்ளது. எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான இந்த பாதையில் கப்பல்களின் சுதந்திரமான நடமாட்டத்தை உறுதி செய்ய பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இந்த ...

செல்போன் நெட்வொர்க் பிடிக்கவில்லை என்றால் ‘போர்ட்டபிலிட்டி’ (Portability) செய்வது போல, இனி உங்கள் வங்கி கணக்கையும் பிடித்தமான வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம்! இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது ‘பேமெண்ட்ஸ் விஷன் 2028’ திட்டத்தின் கீழ், ‘PaSS’ (Payments Switching Service) என்ற புதிய முறையைக் கொண்டு வருகிறது. இதன் மூலம், உங்கள் பழைய வங்கி கணக்கு ...

40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி உலக சாதனை படைத்த ‘பாடும் நிலா’ எஸ்.பி.பி-யின் நினைவாக, கேரள மாநிலம் பாலக்காட்டில் அவரது முழு உருவச்சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது.கண்ணூர் பய்யன்னூரைச் சேர்ந்த பிரபல சிற்பி கானாயி உன்னி இந்தச் சிலையை வடிவமைத்துள்ளார். சுமார் 10 அடி உயரம் கொண்ட இந்தப் பிரம்மாண்ட சிலை, கண்ணாடி உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. ...

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, சுங்கச்சாவடிகளில் நெரிசலைக் குறைக்கவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் ரொக்கப் பணம் வாங்கும் முறை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் புதிய அறிவிப்பின்படி, ஏப்ரல் 1முதல் தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்தம் 77 சுங்கச்சாவடிகளில், 66 சுங்கச்சாவடிகளில் இந்த புதிய ...

இந்தோனேசியாவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியிருக்கிறது. ரிக்டர் அளிவல் 7.8 என நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. இந்தோனேசியாவின் டெர்னேட் அருகே வடக்கு மொலுக்கா கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு அண்டை நாடுகளில் சுனாமி ...

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் இப்போது டிஜிட்டல் உலகையே அதிரவைக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. பஹ்ரைனில் உள்ள அமேசான் நிறுவனத்தின் தலைமையகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அமேசான் வெப் சர்வீஸ் பிரிவின் கீழ் இயங்கும் ‘படெல்கோ’ நிறுவனத்தின் கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளது. முன்னதாக, ஏப்ரல் ...

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அரசு மதுக்கடைகளுக்கு ஏப். 21 முதல் 23 ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சுதந்திரமான, நியாயமான, அமைதியான மற்றும் சுமுகமாக தோ்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில் ஏப். 21 காலை ...