உக்கடம் பேருந்து நிலையத்தில் பஸ் டிரைவர்கள் மோதல்: ஒருவர் காயம்- மற்றொரு டிரைவர் கைது..!

கோவை: பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரியை சேர்ந்தவர் உம்மர் (வயது49) கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றி கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த பாலக்காடு புதுச்சேரியை சேர்ந்த மற்றொரு கேரள பஸ் டிரைவர் முஜிபுர் ரகுமான் ( வயது 48)அந்த பஸ்சை நகர்த்துமாறு கூறினார். அதற்கு உமர் மறுத்தார் . இதனால் அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முஜுபூர் ரகுமான், டிரைவர் உம்மரை முகத்தில் கைகளால் தாக்கினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து உக்கடம் போலீசில் பஸ் டிரைவர் உமர் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி மற்றொரு பஸ் டிரைவரான பாலக்காடு, புதுச்சேரியை சேர்ந்த முஜிபூர் ரகுமான் ( வயது 48 ) என்பவரை கைது செய்தார் .மேலும் விசாரணை நடந்து வருகிறது..