பூட்டிய வீட்டில் திடீர் தீ விபத்து – ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்..!

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி உமா ஆனந்தி ( வயது 56) இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்கள் . மகன்களை பார்க்க உமா ஆனந்தி கடந்த 27ஆம் தேதி சிங்கப்பூர் சென்று இருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் வீரமணி என்பவர் உமா ஆனந்திக்கு போன் செய்து அவரது வீட்டில் தீப்பிடித்து எரிவதாக கூறினார். இந்த தீ விபத்தில் அவரது வீட்டில் உள்ள ஏராளமான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். சேதம் மதிப்பு ரூ 5 லட்சம் இருக்கும் .இது குறித்து உமா ஆனந்தி துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார் .சப்- இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..