சத்தியமங்கலத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்க விழா..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவிதைகள் வாசகர் வட்டம் மற்றும் சுந்தர் மஹால் ஆகியவை இணைந்து நடத்திய புத்தகத் திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவியர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் பள்ளி மாணவர், மாணவர்கள் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதால் அவர்களை மீண்டும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சத்தியமங்கலம் பகுதியில் வசிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் சத்தியமங்கலம் விதைக்கள் வாசகர் வட்டம் மற்றும் சுந்தர் மஹால் ஆகியவை சார்பில்  புத்தகக்கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. இதில்  மாணவ,மாணவியரின் பங்களிப்பு அவசியம் இருக்க வேண்டும் என்பதற்காக சத்தியமங்கலம் பகுதியில் உள்ள பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது
இந்த கண்காட்சியில் தமிழ் இலக்கியம், இந்திய வரலாறு, அரசியல், கவிதை, சிறு கதைகள், அறிவியல், வீரப்பன் வரலாறு, வீரப்பனை கொன்ற போலீசார் யுக்தி, விவசாயம், சிறு கதைகள்,குழந்தை தாலாட்டு, நீர் மேலாண்மை, நீதிமன்றம், பொது அறிவு, அகராதிகள் குறித்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றன. மாணவ,மாணவியர்கள் அறிவியல், கதை, தமிழ், அரசியல் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். தொடர்ந்து 6 நாள்கள் நடைபெறும் இந்த புத்தகக்கண்காட்சியில் தினந்தோறும் எழுத்தாளர்கள், சொற்பொழிவாளர்கள் பங்கேற்கின்றனர்.
புத்தகக்கண்காட்சியில்  தினந்தோறும் தமிழ் இலக்கியம், நாளிதழ்,கட்டுரைகள் படிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் பள்ளி மாணவ,மாணவியருக்கு இலக்கியம், கட்டுரை, விளையாட்டு, அரசியல் புத்தகங்கள் வழங்கி வாசிப்பின் அவசியத்தை உணர்த்தியதாகவும் வாசிப்பின் பழகத்தால் உலகறிவு, பொதுஅறிவு மற்றும் தமிழ் கலாச்சாரத்தை பெற முடியும் என விதைகள் வாசகர் வட்டத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இன்று துவங்கிய கண்காட்சியில் ஒரே நாளில் ரூ.1 லட்சத்துக்கு விற்பனையாதாக புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்..