மலரும் நினைவுகள்… பெங்களூருவில் தான் வேலைப் பார்த்த பணிமனைக்கு சென்று ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த் ..!

டிகர் ரஜினிகாந்த் பெங்களூருவில் தான் பணியாற்றிய போக்குவரத்து கழக டிப்போவிற்கு திடீரென சென்று, அங்குள்ள பணியாளர்களிடம் கலந்துரையாடி மகிழ்ந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் இமயமலையில் இருந்து திரும்பினார். ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்திற்குப் பிறகு ‘தலைவர் 170’ படத்திற்குத் தயாராகி வரும் ரஜினிகாந்த், திடீரென பெங்களூருவில் ஆரம்ப காலத்தில் தான் பணியாற்றிய போக்குவரத்து கழக டிப்போவிற்கு சென்று அங்குள்ள பணியாளர்களிடம் கலந்துரையாடி மகிழ்ந்துள்ளார்.

திடீர் விசிட் அடித்து ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது மட்டுமல்லாமல் தன்னுடைய மலரும் நினைவுகளையும் அவர்களுடன் பகிர்ந்துள்ளார் ரஜினி. அங்குள்ள ஊழியர்கள் ரஜினியுடன் ஃபோட்டோ, வீடியோ எடுத்துள்ளனர். இந்த காணொலி, புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.